இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"முதலாம் இடத்தில் "- உள்ளவர்களை மட்டும் "கவனிப்பதை விட - நமக்காக மாத்திரம் - எவர்களுக்கு நன்மை தேவைப்படுகிறதோ அவர்களை கவனிக்கும்படி தேவன் நமக்குக் கட்டளையிடுகிறார் - அந்த நன்மை உதவி, உற்சாகம் , பாராட்டு, அன்பு, பாசம், கவனிப்பு அல்லது வாக்குறுதி ஆகியவையாக இருக்கலாம் . நாம் உறுதியாகச் செயல்பட்டு, அதற்குரிய பத்திரமான மக்களுக்குத் தேவையானதை வழங்க வேண்டும். நாம் சொந்த ஜனங்களாகவும் இருக்க வேண்டுமென்று பவுலானவர் நமக்குச் சொல்வது போல, இயேசுவின் மூலமாக இரட்சிக்கப்பட்டு, " "நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்கும்படி" (தீத்து 2:14) இந்த நிருபத்தில் குறிப்பிடுகிறார் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் சுயநலமாக இருந்ததிற்காக என்னை மன்னியுங்கள். நான் அடிக்கடி என் தேவைகளை அல்லது எனக்கு வேண்டிய காரியங்களை மாத்திரமே கவனிக்கிறேன். என்னை ஆசீர்வதித்த பல நல்ல மற்றும் தகுதியானவர்களை நீர் என் வாழ்க்கையில் வைத்துள்ளதற்காக உமக்கு நன்றி . பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சுற்றியிருக்கும் என் நன்மையை ஆசீர்வாதமாகப் பார்க்க என் இருதயத்தைத் திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பிதாவை மகிமைப்படுத்தும் வழிகளில் செயல்படவும், இயேசுவின் நற்குணத்தை பிரதிபலிக்கவும் எனக்கு தைரியம் கொடுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து