இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் வேதாகமத்தை நேசிக்கிறேன், ஏனென்றால் அது மெய்யாகவே, நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்து கசப்பான காரியங்களுக்கு மத்தியில் எப்படி நேர்மையாக ஜீவிப்பது என்று போதிக்கிறது. இன்றைய நமது வசனத்திற்கு முந்தைய வசனத்தில், யோவான் தமது சபைகளுக்கு,நாமும் நம் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்று கூறினார். அவர்(கிறிஸ்து )தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; இத்தகைய அன்பை நாம் உணராதிருக்கும் போது,யோவான் அந்த மாதிரியான சத்தியத்தை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதை நான் விரும்புகிறேன். இந்த வசனம் அந்தக் கொள்கையைப் பயன்படுத்துவதை தினசரி யதார்த்தமாக்குகிறது: உங்கள் நம்பிக்கை வட்டத்தில் உள்ள ஒருவருக்கு இப்படிப்பட்ட வார்த்தை தேவையா? பிறகு தாமதம் ஏன்?அவர்களுக்கு உதவுங்கள்; அதுதான் உன் ஜீவனைக் கொடுப்பது!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே , என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதற்கு உமது கரமாகவும் இருதயமாகவும் இருக்க என்னைப் பயன்படுத்துங்கள். என் திருச்சபை குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும் குறைச்சலுள்ள சகோதரர்களுக்கும், இயேசுவை ஆண்டவராக இன்னும் அறியாத என் அண்டை வீட்டிலுள்ளவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்க வேண்டிய தாராள மனப்பான்மையையும் பொறுமையையும் எனக்குக் கொடுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து