இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மேலான அதிகாரம் நம்முடைய இருதயத்தை இருமாப்பு அடையச் செய்து , நம்முடையதல்லாத காரியங்களை நமக்கு சொந்தமாக்கி கொள்வதன் மூலம், அந்த இருமாப்பு நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை மறக்கச் செய்து, எளியவர்களின் கூக்குரலை புறக்கணிக்க இவை ஏதுவாய் இருக்கிறது . மேலான அதிகாரம் இருமாப்பை உண்டுபண்ணி இருதயத்தை கெடுக்கிறது, ஏனென்றால் எல்லா மேலான அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தேவன் ஒருவரே கையாள முடியும்! தேவர்களைப்போல மாறவேண்டும் என்று இச்சித்து பாவம் செய்த- ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்தைப் போன்றது. மெய்யான அதிகாரம் என்னவென்றால் - உடைந்தவர்களை ஆசீர்வதிக்கவும், எளியவர்களை உயர்த்தவும், தவறுசெய்தவர்களை மன்னிக்கவும், பெலனற்றவர்களுக்கு உதவி செய்பவர்களையே மெய்யான அதிகாரம் உடையவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும் . இந்த காரியம் நமக்கு எப்படி தெரியும்? தேவனானவர் இப்படி பட்ட காரியங்களை நடப்பித்திருக்கிறார் !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள மற்றும் ஒப்பற்ற தேவனே , மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்காக என்னை நிலைநிறுத்திக் கொள்வதில் என் நேரத்தை செலவிட விரும்பவில்லை. தயவுசெய்து மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி கிருபையையும் , அதை செய்வதற்கான பெலனையும் மற்றும் வாய்ப்பையும் எனக்கு தாரும் - இவைகளை செய்வதினால் நான் என்னை உயர்ந்தவனாகவோ அல்லது முக்கியமானவனாகவோ எண்ணாமல் , ஆனால் நான் அவர்களுக்கு செய்யும் உதவியினால் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதால் , நீர் மகிமைப்படுகிறீர் , துதிக்கப்படுகிறீர் என்ற எண்ணத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.