இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் திருச்சபையில் உள்ளவர்கள் எப்போதாவது ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, விரும்பினால் , அந்த சபையில் உள்ள மூப்பர்கள் அது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்ட வேண்டும். நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் கடைசி ஜெபங்களில் ஒன்றாயிருக்கிறது . ஏன்? அப்பொழுது தான் இவ்வுலகம் இயேசு கிறிஸ்துவை பிதாவானவர் அனுப்பினார் என்பதை அறிந்துக்கொள்ளும் . ஒருமைப்பாடு முக்கியமானது மாத்திரமல்ல, அது இன்றியமையாததாகும், ஒரு வார்த்தையினால் அல்லது நம்பிக்கையினால் மாத்திரமல்ல , இயேசுவை ஆண்டவராகக் கொண்டு வாழும் ஜனங்களிடையே அவைகள் நாள்தோறும் காண்பிக்கும் கிரியையாய் உள்ளது.

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னுடைய எல்லா ஜெபங்களையும் பிதாவிடம் கொண்டு சேர்க்கிறீர் , அந்த கிருபைக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். எங்களுடைய பிதாவுக்கு மகிமை கொண்டு வரவும், சமாதானத்துடன் வாழவும், உமக்கு சொந்தமானவர்களுடன் ஒருமித்து ஊழியம் செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன். நீர் விரும்பும் ஒற்றுமைக்காக எங்கள் சபையிலுள்ள குடும்பத்தை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கும்படி கேட்கிறேன். இயேசுவின் நாமத்திலும், ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் ஒத்தாசையோடேயும் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து