இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில நேரங்களில் மிக ஆழமான சத்தியம் மிகவும் எளிமையானது. இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், கிறிஸ்துவுக்காக உலகத்தில் உள்ள மக்களை சந்திப்பதற்காக பரிசுத்த ஆவியின் அதிகாரத்தின் மூலமாய் பெற்ற வல்லமை , தேவனுடைய பலத்த கிரியைகளை உள்ளடக்கியது. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து (இங்கே - "எருசலேம்") ஊழியத்தை தொடங்குவதற்கான தேவனுடைய திட்டத்தைப் பற்றி கூறுகிறார், அவர்கள் தங்கியிருக்கும் பட்டணத்துக்கு அருகாமையில் (அருகில் - "அனைத்து யூதேயா மற்றும் சமாரியா") ​​தொடங்கி , உலகத்தில் உள்ள (வெகுதொலைவில் - பூமியின் கடைசி வரை "). நம்முடைய நற்சாட்சியை உலகமெங்கும் உள்ள ஜனங்களுக்கு , இயேசுவுக்குள் தேவன் நமக்காக என்ன செய்தார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்ல நாம் தயாராக இருப்பதையும், அந்தச் சாட்சியை திறம்படச் செய்ய பரிசுத்த ஆவியின் வல்லமையையும் அடிப்படையாகக் கொண்டது!

என்னுடைய ஜெபம்

உலகில் உள்ள அனைத்து மக்களின் பிதாவும் மற்றும் தேவனே , உமது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் எங்களை நிரப்புங்கள், எங்கள் நம்பிக்கையை மற்றவர்களுக்கு திறம்பட பகிர்ந்து கொள்ள எங்களுக்கு உதவுங்கள், மேலும் எங்கள் நகரம், பகுதி மற்றும் உலகத்தை நற்செய்தியுடன் நிரப்ப எங்களை ஊக்குவிக்கவும். நாங்கள் இன்னும் நம்புகிறோம், பிதாவே , முற்காலத்திலே நாங்கள் எங்களுடைய வாழ்க்கையில் செய்ததை நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்கள். உம்முடைய நாமத்தை மகா மேன்மையாக்குங்கள் . எல்லா மக்களின் பார்வையிலும் உமது பரிசுத்தத்தை பிரசித்தப்படுத்துங்கள் . கிருபையின் நற்செய்தியுடன் அனைத்து நாடுகளையும் சென்றடைய வேண்டும் என்ற உமது விருப்பத்தை நிறைவேற்ற என்னையும் உமது மக்களையும் பயன்படுத்துங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து