இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சுயாதீனமானது பொறுப்புடன் கையாளப்படும் போது அது ஒரு அற்புதமான ஈவு . நியாய பிராமணத்தின் கீழாய் நாம் இல்லாதது மிகவும் இனிமையான கிருபையாகும், நாம் பெற்றதான அந்த நல்ல ஈவை மற்றவர்களுக்கு தயவு , இரக்கம் மற்றும் பராமரிப்பு இவைகளின் மூலமாய் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறோம்.
என்னுடைய ஜெபம்
இரட்சிப்பின் மகா பெரிய தேவனே , பார்வோனின் பிடியிலிருந்து இஸ்ரவேலையும், கோலியாத்தின் வாளிலிருந்து தாவீதையும், சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலையும் மீட்டதற்காக உமக்கு நன்றி. நீரே பெரியவர் , கல்வாரியில் இயேசுவானவர் பாவத்தினின்று பெற்ற வெற்றிக்காகவும் , அவர் மரணத்தை ஜெயித்து உயிர்தெழுந்ததினால் அவருடைய கல்லறை வெறுமையாய் இருப்பதினால் அவை எல்லாவற்றிற்கும் உமக்கு நன்றி. அடியேன் பெற்ற இரட்சிப்புக்காக உம்மை நேருக்கு நேர் பார்த்து நன்றி சொல்ல ஆசையாய் இருக்கிறேன். அந்த நாள் மட்டும் , இந்த சுயாதீனத்தை கொண்டு உம்முடைய பிள்ளைகளுக்குச் ஊழியஞ் செய்யவும் உமக்காக ஜீவிக்கவும் அடியேனை வழிநடத்தும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.