இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பரிசுத்த ஆவியின் வல்லமை செழித்து வளரும் இடத்தில், நமது மனுஷனுடைய குணாதிசயம் மாற்றப்பட்டு, நம் ஆவிக்குரிய பலனைக் காண்பிக்கிறோம் . இந்த முதிர்ச்சி ஒரே இரவில் உருவாகவில்லை. எவ்வாறாயினும், ஒரு நபர் தொடர்ந்து நீண்ட காலமாய் இயேசுவைப் பின்பற்றி நடக்கும்போது , ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நீதியுள்ள குணத்தையும், கிருபையுள்ள இரக்கத்தையும், உண்மையுள்ள அன்பான தயவையும் அவர்களுடைய வாழ்க்கையில் பிரதிபலிப்பதை நாம் கவனிக்கலாம் . எனவே, ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் எந்த ஆவியின் கனியை ஜீவனுள்ளதாக கொண்டுவருகிறார்? எந்த வழிகளில் கிறிஸ்துவைப் போல் ஆக நீங்கள் முதிர்ச்சியடைந்துள்ளீர்கள்? எந்தெந்த பகுதிகளில் பரிசுத்த ஆவியானவர் அதிகக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நாம் ஒன்றுக்கூடி ஜெபிக்கும்போது ஏன் ஒரு கணம் எடுத்து நீங்கள் போராடும் பகுதிகளை கண்டறிந்து அதை உணர்வுபூர்வமாக பரலோகத்தின் தேவனிடம் ஒப்புவிக்கக்கூடாது?
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையும், எங்கும் வியாபித்திருக்கிற பிதாவே , நாங்கள் ஆண்டவராகிய இயேசுவைப் போல ஜீவிக்க முற்படுகையில், எங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை மேம்படுத்தியதற்காக நன்றி. பரிசுத்த ஆவியின் கனிகளை எங்களுடைய வாழ்கையில் முழு முதிர்ச்சிக்கு கொண்டு வாருங்கள். நாங்கள் எங்கும் எப்பொழுதும் பாவத்துடன் போராடுகிறோம் என்பது உங்களுக்கு நன்றாய் தெரியும். எங்களை மீட்பதற்கும் முழுமையாகப் பரிசுத்தப்படுத்துவதற்கும் நாங்கள் வேண்டுமென்றே எங்கள் வாழ்வின் அந்தப் பகுதிகளை உமது பரிசுத்த ஆவியியானவரிடம் ஒப்புவிப்போம் , எனவே ஆவியானவர் தொடர்ந்து எங்களை, நம் இரட்சகரைப் போல மாற்றுவார். அவருடைய பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.