இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

முடமான ஒரு மனிதனை இயேசுவானவர் மன்னித்தார், பின்னர் அந்த மனிதனை குணப்படுத்துவதன் மூலம் உலகத்தில் அவருக்கு மன்னிக்கும் அதிகாரம் உன்டென்பதை காண்பித்தார் . இந்த குணப்படுத்துதல் எவ்வளவு உற்சாகமுள்ளது மற்றும் அவசியமானது என்று காண்கிறோம் , மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அதைக் கண்டவர்களின் எதிர்வினை; அவர்கள் வியப்புடனும் மற்றும் ஆச்சரியத்துடனும் தேவனை மகிமைப்படுத்தினர் . இயேசுவானவர் தேவன் நம்மோடிருக்கிறார் என்பதை காண்பித்து ஊழியம் செய்ய வந்தார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இயேசு யார் என்பதையும், அவர் நமக்காக என்ன செய்தார், தொடர்ந்து செய்யப் போகிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளும்போது, ​​இன்றும் நாம் அதையே செய்ய வேண்டும் - வியப்புடனும் ஆச்சரியத்துடனும் நம் ஸ்தோத்திரத்தை அவருக்கு முழுமையாக ஒப்புவிக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , பரலோகத்தின் தகப்பனே, நான் உமது நாமத்தை மகிமைப்படுத்துகிறேன், உமது குமாரனும் என் இரட்சகருமான இயேசுவின் மூலமாக நீர் என்மீது அளவற்ற கிருபையை பொழிந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன், அவருடைய நாமத்தினாலே அடியேன் ஆச்சரியமும் பிரமிப்பும் நிறைந்த இருதயத்திலிருந்து இந்தத் துதியைச் செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து