இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜனக் கூட்டத்தின் இருதயங்களைக் ஆட்கொண்ட பிறகு, இயேசு இப்போது மற்றொரு சீஷரான லேவியை அழைக்கிறார் - இவர் மத்தேயு என்றும் அழைக்கப்படுகிறார். இந்த அழைப்பில் இரண்டு விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை. 1.வேறு எந்த மதத்தின் தலைவரும் தேர்ந்தெடுக்காத ஒருவரை இயேசுவானவர் தெரிந்துக்கொண்டார் , ஒருவர் வரி வசூலிப்பவர் மற்றோவர் ரோமானிய அனுதாபியாகிய அவர்களை அழைத்தார் - இயேசு வாழ்ந்த காலத்தில் எந்த ஒரு யூதருக்கும், மத்தேயுயானவர் அவர்களுடைய பாரம்பரியத்திற்கும் அவர்களுடைய நம்பிக்கைக்கும் துரோகியாகத் தோன்றியிருப்பார். 2. வரி வசூலிப்பவனாகிய லேவி, அவருடைய வாழ்வாதாரத்தையும் செல்வத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் மாத்திரம் பின்பற்றிப் சென்றார் . இயேசுவைப் பின்பற்ற மத்தேயு மற்றும் மத்தேயுவின் உறுதியான மற்றும் உடனடிப் பதிலுக்கான இயேசுவின் அழைப்பு ஏற்று நடந்ததை பார்த்தோமானால் , சுவிசேஷத்தினால் யாரையும் அணுக முடியாதவர்கள் அல்லது நம் தேவனால் பயன்படுத்த முடியாதவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது என்பதை நமக்கு வல்லமை வாய்ந்த நினைப்பூட்டளின் பகுதியாக இது இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

அனைத்து மக்களின் பிதாவே , இயேசுவைப் பற்றி மேலும் அறியத் தயாராக உள்ளவர்களை இன்று எங்கள் பாதையில் நீர் வைக்கும் மக்களை அடையாளம் காண எங்களுக்கு உதவிச் செய்யும் . எங்கள் இரட்சகரைப் பற்றி அவர்களுடன் எப்போது, ​​எப்படிப் பேசுவது என்பதை அறியும் ஞானத்தையும் விழிப்புணர்வையும் எங்களுக்குத் தாருங்கள். மேலும், அன்பான பிதாவே , சீஷர்களாக ஆகக் குறைந்த வாய்ப்புள்ள சிலரின் தகுதியற்ற தன்மையைப் பற்றி நாங்கள் உடனடியாகத் தீர்ப்பு வழங்கியதற்காக நீர் எங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். காணாமற் போன அனைவரையும் தேடவும் இரட்சிக்கவுமே இயேசு வந்தார் என்பதை நாம் அறிவோம், எனவே தயவு செய்து பரிசுத்த ஆவியானவரைப் பயன்படுத்தி நம் இருதயங்களை நிலைவரப்படுத்தி நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இருதயத்தைப் போல பிரதிபலிக்கும்படி உதவிச் செய்யும் , அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து