இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பாலியல் இச்சையினால் நிறைந்த உலகில் வாழ்ந்து, இணையத்திலும் இன்றைய ஊடகங்களிலும் ஆபாசப் படங்கள் பரவுவதை எதிர்கொண்டு, இந்தப் பிரச்சினையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள்? பாவம் நம் இருதயத்தில் தொடங்கி, நம்மிடம் இல்லாததை நாம் ஏக்கத்துடன் தேடும்போது தொடங்குகிறது என்பதை அடையாளம் காணும்படி இயேசுவானவர் நமக்கு சவால் விடுகிறார். நம் இருதயங்களைக் முழுமையாக பாதுகாப்பது சாத்தியமற்றது அல்லது கேலிக்குரியது என்று உலகம் நினைக்கும் அதே வேளையில், அவர் பாலியல் பாவத்தை - அது தொடங்கும் இடம், நம் இருதயத்திலே இச்சையினால் உண்டாகுகிறது - இவைகளைஇயேசுவானவர் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

Thoughts on Today's Verse...

Living in a sexually supercharged world and facing the prevalence of pornography on the Internet and in today's media, how are you doing with this issue? Jesus challenges us to recognize that sin starts in our hearts and begins when we longingly seek what is not ours to have. While the world may think such rigorous guarding of our hearts as impossible or ridiculous, Jesus wants us to know he takes sexual sin — and the place it begins, the lust of our hearts — seriously.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , பாலியல் சோதனையை எதிர்க்கும் வலிமையையும், அதிலிருந்து விலகி நிற்கும் ஞானத்தையும், அதில் வெற்றிபெறும் குணத்தையும் எனக்குத் தாரும் . தேவனே , என் இருதயத்தைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமான மற்றும் ஜீவனை உண்டாக்கும் காரியங்களின் மேல் அதிக விருப்பம்கொள்ளும்படி செய்தருளும் . இயேசுவின் மகத்தான நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Loving Father, give me the strength to resist sexual temptation, the wisdom to stay away from it, and the character to triumph over it. Purify my heart, O God, and make it yearn for what is holy and life-giving. In the mighty name of Jesus, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of மத்தேயு-Matthew - 5:28

கருத்து