இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சனகெரிப்பு என்று அழைக்கப்படும் எருசலேமில் உள்ள ஆளும் சங்கத்தின் கடுமையான எச்சரிக்கைக்கு எதிராக, பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் இயேசுவை ஆண்டவராக அறிவித்தனர். இந்த சனகெரிப்பு சங்கமானது அடிப்படையில் இயேசு இரட்சகரை சிலுவையில் அறையுமாறு ரோமர்களை வலியுறுத்திய அதே குழு தான் ! இருப்பினும், அவரையும் அவருடைய ஊழியத்தையும் முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட எதிரிகளின் முயற்சிகளில் இயேசு வெற்றி பெற்றார் என்பதை பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அறிந்திருந்தனர். இயேசுவை சிலுவையில் அறைந்த அதே மக்களின் கட்டளைகளை அவர்கள் வெளியரங்கமாக மீறத் தேர்ந்தெடுத்தனர். எந்த தரநிலையிலும், அது மெய்யான தைரியம். அவர்களின் இந்த தைரியத்திற்கு காரணம்? அவர்கள் எருசலேமில் தொடங்கி, உலகம் முழுவதும் சத்தியத்தைப் பிரசங்கிக்க இயேசுவின் மூலம் தேவனால் அனுப்பப்பட்டவர்கள் (அப்போஸ்தலர் 1:8). அவர்களின் கிரியைகள் நம்மை நாமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ளும்படி சவால் விடுகின்றன: இயேசுவின் விருப்பத்திற்கு எதிராக பிடிவாதமாக அமைக்கப்பட்ட கலாச்சாரத்தில் நாம் எப்படி அவருக்காக வேர்க்கொண்டு நிற்கிறோம்?
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவாதி தேவனே ; இயேசுவைப் பற்றிய மகிமையான சத்தியத்தைப் பிரசங்கிப்பதில் தைரியமாக இருக்க உமது ஆவியின் கிரியையின் மூலம் எனக்கு அதிகாரம் கொடுங்கள். நான் என் விசுவாசத்திலிருந்து பின்வாங்கவோ அல்லது இயேசுவின் பேரில் நான் ஜெபிக்கிற நம்பிக்கையை கைவிடவோ விரும்பவில்லை. ஆமென்.