இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் மத விரோதிகள், தங்கள் பார்வையில் பாவிகள் என்று அழைக்கப்படும் நபர்களுடன் வேண்டுமென்றே பழகியதற்காக அவரை அடிக்கடி குற்றம்சாட்டினார்கள். இருப்பினும், இயேசுவின் இந்த நடத்தைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய காரணம் இருந்தது. அவர் பிரபலமாகவோ, வித்தியாசமாகவோ, வினோதமாகவோ இருப்பதற்காக பாவிகளுடன் பழகவில்லை. எல்லா வகை மக்களையும் நேசித்ததால் எல்லா வகையான மக்களுடனும் ஆண்டவராகிய இயேசு ஒப்புரவாகினார் ! அவர் அடிமைகளை மீட்கவும், இழந்ததை தேடவும் , உடைந்ததைச் சரிசெய்யவும், பாவிகளை மீட்டெடுக்கவுமே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். எனவே, இயேசு எல்லா வகையான மக்களுடனும் தொடர்பு கொண்டார்! இன்று திருச்சபையில் இயேசுவின் சரீரம் நம் மத்தியிலே அப்பமாகவும், ரசமாகவும் பிரசன்னமாக இருக்க , எல்லா மக்களையும் இரட்சிக்க முயல்வதில் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதை விட குறைவான எதையும் நாம் முயற்சி செய்ய முடியுமா?

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் எனக்கு அறிமுகமானவர்களிடம் பாதுகாப்பைத் தேர்ந்தெடுத்து, எனது உறவுகளில் குழப்பமான சிக்கல்களைத் தவிர்த்ததற்காக அடியேனை மன்னியும் . அந்த வழிகளில் வித்தியாசமாக இருக்க என் இருதயத்தை மாற்றி, என்னைச் சுற்றியுள்ளவர்களிடம் வெளிப்படையாக இருக்க உதவிச் செய்யும். தொலைந்து போனவர்களையும், தனிமையில் இருப்பவர்களையும், மறக்கப்பட்டவர்களையும், தேவையுள்ளவர்களையும் பார்க்கும்படி தயவுக்கூர்ந்து என் கண்களைத் திறந்த்தருளும். அவர்களை உமது கிருபைக்கு வழிநடத்தி செல்லவும், அவர்கள் உம்மை கனம்பண்ண தங்கள் வாழ்க்கையைத் திருப்பும்போது, ​​உம் மக்களுடன் அவர்களது துணையை கண்டறிய அடியேன் உதவும்படி என்னை எடுத்துப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து