இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரக்கம் செய்வது என்பது தனிப்பட்ட பெருமைக்குரிய காரியமல்ல, இரக்கமாயிருப்பது என்பது கிரியையில்லாமல் ஒரு தனிப்பட்ட உள் உணர்ச்சி அல்ல. கிறிஸ்தவ இரக்கம் என்பது எப்பொழுதும் நமது தியாகங்களையோ அல்லது கவனத்தில் அவர்கள் கொண்டுவருவதற்கு முன்னமே தேவைப்படுபவர்களின் காரியங்களை அறிந்து அவர்களுடைய சிறந்த நலனுக்காகவும் மேன்மையான நித்திய நன்மைக்காகவும் செயல்பட நம்மை ஊக்குவிக்க வேண்டும். நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்கத் தேவையானதை எப்பொழுதும் தேவன் நமக்கு வழங்குகிறார், மேலும் அவரைப் பிரியப்படுத்துவதே நமது குறிக்கோளாக இருக்கும்போது, ​​​​தேவையில் உள்ள மற்றவர்களை ஆசீர்வதிக்க அவரால் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாம் ஏங்கும்போது நமக்குக்குரிய ஏற்ற பலனை அவர் நமக்கு கொடுக்கிறார் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே மற்றும் இரக்கமுள்ள மேய்ப்பரே, ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒருவரை ஆசீர்வதிக்க என்னைப் எடுத்துப் பயன்படுத்தியருளும் . பொருளாதார தேவைகளிலும், ஆவிக்குரிய உதவிகள் தேவைப்படும் மக்களை பார்க்க தயவுக்கூர்ந்து என் கண்களைத் திறந்தருளும் , அப்படிப்போல அவர்களுடைய வார்த்தைகளை கவனித்து கேட்க நல்ல காதுகளை எனக்குத் தாரும் . என்னுடைய மீட்பர் ஊழியம் செய்ததுப் போல , அடியேனும் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உம்முடன் நெருங்கிச் நடத்தி செல்ல முற்படுகையில் எனக்கு வேண்டிய தைரியத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து