இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"இயேசுவிடம் ஒரு பிரமாணம் இருந்ததாக எனக்குத் தெரியாது!" பழைய ஏற்பாட்டில் காணப்படுவது போல் எழுதப்பட்ட ஒன்று அவரிடம் இல்லை. இயேசு நம் இருதயங்களில் ஆவியால் நிரப்பப்பட்டவர் மற்றும் நம் குணத்தை மாற்றுகிறவராயிருக்கிறார் . நாம் நம்மில் அன்பு கூருவது போல நாம் பிறனிடத்திலும் அன்பு கூரவேண்டும் . நம் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பெலத்தோடும் அன்பு கூரவேண்டும்.இந்த வகையான "பிரமாணம் " கற்பலகைகளில் எழுதப்பட்ட பிரமாணத்திலிருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது (யாக்கோபு 2:12-17) மேலும் இயேசுவின் வாழ்க்கை, தியாகம் மற்றும் பிறருக்கான ஊழியத்தை வழிநடத்திய கொள்கையை வலியுறுத்துகிறது (பிலிப்பியர் 2:5-11) . நாம் மற்றவர்களை நேசிக்கப் போகிறோம். எழுதப்பட்ட பிரமாணத்தை விட மிகவும் அதிகமாக , இது கிறிஸ்துவின் மேல் நமக்கு உள்ள மாறாத பற்று மற்றும் கிறிஸ்துவைப் போல இருக்க வேண்டும் என்றதான ஒர் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கை .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் இரக்கமுள்ள பிதாவே , மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இயேசுவானவர் கொண்டதான வாஞ்சையை போலவே எனது ஆர்வமாக இருக்கட்டும், இதனால் மற்றவர்கள் என் வாழ்க்கையில் உம் அன்பையும் கிருபையும் கண்டு உம்மை மகிமைப்படுத்துவார்கள்! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து