இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இப்படியும் கூட நாம் கூறலாம். "உன்னிடத்தில் அன்பு கூருவதுப்போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக!". இயேசு கிறிஸ்துவானவர் நமது பாவத்தின் கறைத்திரைகளையும், வலிகளையும், வேதனைகளையும் சுமந்து தீர்க்கும்படியாய் வந்தார். ( ஏசாயா 53 ஆம் அதிகாரத்தில் வாசிக்கும்பொழுது, பாடு அனுபவிக்கிற தேவனுடைய ஊழியக்காரனைப் பற்றி மிக வல்லமையாய் விவரிக்கப்பட்டுள்ளதை, புதியஏற்பாட்டின் ஒரு பகுதியில் இயேசுவை குறித்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் ). நம்மைச்சுற்றி வாழ்கிறதான மக்கள் மத்தியில் வாயின் வார்த்தையினால் மாத்திரமல்ல நம்முடைய கிரியைகளினாலும் மற்றவர்களை மீட்கும் வகையில் ஜீவிக்க வேண்டுமென்று கூறுகிறார்.ஜெபம் செய்வதைக் காட்டிலும் , நாங்கள் உங்களுக்கு என்ன உதவி செய்யமுடியும்? என்று கேட்பதை விட, பாரத்தோடு வாழும் மக்களுக்கு ஊழியஞ்செய்யவும் , உதவவுமே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், இரக்கமும் நிறைந்த தேவனே. அடியேனுடைய வாழ்க்கையின் பாதையில் பாரம்நிறைந்து (சோர்ந்து, பெலனற்று ) வருகிறதான மக்களுக்கு உதவிசெய்யும்படி ஆயத்தமுள்ள கரங்களையும், அதை பார்க்கும்படியான கண்களையும்,விருப்பமுள்ள இருதயத்தையும் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து