இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரட்சிப்புக்கு "கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்வது " அவசியமாக இருப்பதால் (அப்போஸ்தலர் 22:16; ரோமர் 10:9-13), இயேசுவானவரை குறித்து அறியாதவர்களுடன் நாம் பிரசங்கிக்காவிட்டால் என்ன நடக்கும்? ? இயேசுவைப் பற்றி கேட்கும் அனைவருக்கும் நாம் அவரை பற்றிய நற்செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அவரை குறித்து உபதேசம் செய்யும் அந்த "யாரோ ஒரு நபர் " நாமாக இருக்க வேண்டும் - நீங்களும் நானும்! மேலும், கர்த்தர் நமக்கு அளித்த வாக்குறுதியை நாம் தவறவிடக் கூடாது : மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.(மத்தேயு 10:32 ).

என்னுடைய ஜெபம்

அக்கறையும் அன்பும் கொண்ட சர்வவல்ல பிதாவே, என் வாழ்க்கையில் உள்ள மக்கள் உம்மால் எனக்கு கொடுக்கப்பட்டவர்கள் என்பதை நான் அறிவேன். இயேசுவைப் பற்றியும் அவருடைய தியாகத்தைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சாட்சி கொடுப்பதில் என்னை தைரியமாகவும் மேன்மையானவனாகவும் ஆக்குங்கள். நற்செய்தியைப் பற்றி அவர்களிடம் எப்போது பேச வேண்டும் என்பதை அறிய எனக்கு ஞானத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து