இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்பிக்கை என்பது அரைமனதாக இருக்கமுடியாது, ஒன்று முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பது அல்லது சந்தேகத்தினாலும் , அவநம்பிக்கையினாலும் சூழப்பட்டிருப்பது . ஆகவே, நம் வாழ்க்கையின் சூழலில் அனுதினமும் சந்திக்கிற போராட்டாமாயிருந்தாலும் ஆழமான மற்றும் கடினமான பிரச்சனைகளுக்கு பதில் தேடுவதாக இருந்தாலும், கர்த்தரிடத்தில் நம்முடைய முழு நம்பிக்கையையும் வைப்போமாக. சரியான முடிவுகளை தேர்ந்தெடுப்பதற்கு தேவனிடத்தில் அவருடைய ஞானத்தையும் வழிநடத்துதலையும் கேட்போமாக. நம்முடைய வாழ்க்கையிலுள்ள நன்மைகளுக்காக அவரை துதித்து வருகிற நாட்களில் அவருடைய ஆசீர்வாதத்தை எதிர்நோக்கி இருப்போமாக. ஏன் ?ஏனென்றால் இன்றும், என்றென்றும் ஜீவிக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

தேவனே, என் தேவனே எனது நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன். நான் உமக்கு மகிமை கொண்டு வரமேண்டுமென்று தேடுகிற என்னை உமது வழியில் நடத்தும். நான் சந்திக்கிற எல்லா காரியங்களிலும் எடுக்கிற முடிவுகளிலும் உதவிச்செய்யும். உம்முடைய கிருபையை பகிர்ந்து கொள்வதிலும் நான் மற்றவர்களை தூண்டக்கூடுவதிலும் உமது மகிமையை பகிர்ந்துக் கொள்வதிலும் நேர்த்தியாய் செய்ய எனக்கு புரிந்துகொள்ளுதலைத் தாரும். என் குடும்பம், நண்பர்கள், உடன்பணிபுரிபவர்களிடத்தில் மீட்பைக் தூண்டக்கூடிய சரியான வார்த்தைகளை பேசத்தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து