இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாய் நம்மை கண்ணியில் சிக்க வைத்து விடும், இல்லையா?! குறிப்பாக அந்த நபரின் இருதயம் தீமையால் நிறைந்திருக்கும் போது இது உண்மையாகும் . ஒரு நபரோடு சம்பாஷிக்கும் போது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி அதிகம் வெளிப்படுத்துகிறது, மேலும் ஒரு தீய நபருக்கு மறைக்க வேண்டிய நிறைய காரியங்கள் இருக்கிறது. நம் உதடுகளின் வார்த்தை நம்மைப் குறித்து என்ன வெளிப்படுத்துகிறது? இது பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவுகிறதா அல்லது நம் ஆத்தும ஜீவியத்தை சீர்குலைக்கும் தீமையை வெளிப்படுத்துகிறதா? எல்லாவற்றிற்கும் மேலாக, நம் வார்த்தைகள் நம் இருதயத்தில் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன (மத்தேயு 12:35, 15:18-19), எனவே தீமைக்கு எதிராக நம் இருதயங்களை பாதுகாப்போம் (நீதிமொழிகள் 4:23).

என்னுடைய ஜெபம்

கர்த்தராகிய ஆண்டவரே, என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாயும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் இருப்பதாக . பரிசுத்த ஆவியானவரே, உமது சுத்திகரிப்பின் வல்லமையின் மூலமாக , என் ஆவியையும், இருதயத்தையும், சரீரத்தையும் தூய்மைப்படுத்துங்கள், அதனால் நான் உமக்கு கனத்துடனும், நீதியுடனும் ஊழியம் செய்வேன். நான் வாயைத் திறக்கும்போது, ​​வெளிவரும் வார்த்தைகள் நீர் அடியேனுடைய வாழ்க்கையை வழிநடத்துகிறீர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் என்னைப் பெலப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து