இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் ஞானஸ்நானத்தின் போது தேவனாவர் கூறின இந்தக் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டுகிறது - "... நான் உம்மில் பிரியமாயிருக்கிறேன்" (லூக்கா 3:21-22). நோவா வாழ்ந்தபோது பாவத்தில் மூழ்கியிருந்த கலாச்சாரத்தின் நடுவில் கூட, நோவா ஆசீர்வதிக்கப்பட்ட வித்தியாசமாக இருந்தார்! நோவாவின் இருதயம் அவருக்கு விசுவாசமாகவும், நோவாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் ஒரு ஆசீர்வாதமாகவும், உலகிற்கு எதிர்காலத்தை வழங்குவதற்கும் பொருத்தமானதாகவும் பரலோகத்தின் தேவன் கண்டார். நீதியான குணத்துடனும், கிருபையுள்ள இரக்கத்துடனும், தேவனுக்கு உண்மையுள்ளவராகவும் வாழ்வது அவருக்கும் அவருடைய வழிகளுக்கும் கலகம் செய்யும் உலகில் கடினமானது. "ஆனால் நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது ." தேவனின் ஒளி இல்லாத உலகில் நாம் தேவனுக்காக வாழும்போது நாம் வாழ்கிற நாட்களில் நம் ஒவ்வொருவருக்கும் இதையே கூறுவோம். நமது வேலைகள், பள்ளிகள், சுற்றுப்புறத்தார் , நட்புகள் மற்றும் பொழுதுபோக்குகளில் அந்த வெளிச்சமாக இருக்கட்டும். நாம் ஒவ்வொருவரும் நோவாவைப் போல இருக்க முடிவு செய்தால், இறுதியில் நாம் செய்யும் வித்தியாசத்தை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

என்னுடைய ஜெபம்

அன்பபும் , பரிசுத்தமுள்ள தேவனே , உம்மைப் பிரியப்படுத்தும் மற்றும் உமக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் ஒரு வாழ்க்கையை நான் ஆர்வத்துடன் வாழ முற்படுகையில், தயவுக்கூர்ந்து அடியேனை என்னை ஆசீர்வதியும் . உலகில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த என்னையும் எனது சபை குடும்பத்தையும் பயன்படுத்துங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து