இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பரிசுத்த வேதாகமம் பல தரப்பட்ட தேவனுடைய ஊழியர்களை அல்லது தலைவர்களை "மேய்ப்பன்" என்ற வார்த்தையை கொண்டு அழைக்கிறது . இருப்பினும், ஒருவரே மிகசிறந்த நல்ல மேய்ப்பன் (சங்கீதம் 23:1-6; யோவான் 10:11-18). நாம் இந்த மேய்ப்பரைப் பின்பற்றுகிறோம், ஏனென்றால் அவர் தனது சொந்த ஜீவனுக்கு மேலாக நம்முடைய ஜீவனை எண்ணுகிறார் - "நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்." ஆவிக்குரிய தலைமையின் உள்ளம் என்பது - அன்போடு கூடிய தியாகம் நிறைந்ததாகும் , மாறாக இதின் காரணமாக மேன்மையை எப்பொழுதும் தேடாது , அது முழு மனதுடனே அக்கறையுடன் சேவை செய்யும் , தன்னலமாக தன்னை மாத்திரம் மிகைப்படுத்தாது (1 பேதுரு 5:1-4). தேவனுடைய ஆடுகளாகிய நாம் இரட்சிக்கப்படுகிறோம், ஏனென்றால் இயேசுவானவரே நம்முடைய நல்ல மேய்ப்பராக இருக்கிறார், அவர் நம்மை தேவனுடைய நித்திய வீட்டிற்குக் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு தம் ஜீவனையே கொடுத்திருக்கிறார் !
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும், அளவற்ற அன்பும் நிறைந்த பிதாவே , இயேசுவை ஆண்டவராகவும், ஆட்டுக்குட்டியாகவும், மேய்ப்பராகவும், ஜீவ பலியாகவும் இருக்க வேண்டும் என்ற உம்முடைய அநாதி தீர்மானத்திற்காக நான் தாழ்மையோடு நன்றி செலுத்துகிறேன். அவரது மரணத்தின் மூலமாக எனக்கு ஜீவனை கொடுத்ததற்காக உமக்கு நன்றி. அவரை கொண்டு தலைமைத்துவத்தை குறித்த மாதிரியை எனக்கு காண்பித்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தின் மூலமாய் உமக்கு என் நன்றியை செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.