இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மேசியாவாகிய கிறிஸ்துவின் வருகைக்கு பின் தேவ தயவினால் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதிக்கும் விதமாக தமது வல்லமையையும், சுகத்தையும் அளிப்பதே தேவ ஜனத்திற்கு கொடுத்த வாக்குத்தத்தமாயிருக்கிறது . பல வகைகளில் நாம் இதை கவனிக்கும் போது இது கிறிஸ்தவர்களுக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது . தேவன் நம்மை நம் இரட்சகராகிய கர்த்தரின் வருகையால் நியாயப்பிரமாணம், பாவம் மற்றும் மரணம் என்கிற பிரமாணத்தினின்று விடுதலையாக்கினதினால் நாம் மகிழ்ந்து களிகூருகிறவர்களாய் இருக்கிறோம். இயேசுவின் பலியினால் தேவப்பிள்ளைகளாகும்படி கிறிஸ்துவைத் தரித்தவர்களாய் இருக்கிறோம் (கலாத்தியர் 3:26,27) அவர் நமக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தையும், நீதியின் சால்வையையும் தரிப்பித்திருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

அன்பின் பிதாவே , இயேசுவின் பலியினால் என்னை நீதிமானாக்கினதால் உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசுவே நீர் என்னுடைய பாவத்திற்கான விலையைக் கொடுத்து எனக்கு ஜீவன் தந்தமைக்காக உமக்கு ஸ்தோத்திரம். தேவனுக்கென்று நான் ஜீவிக்கும் படியாக என்னை பாவத்திலிருந்து கழுவி, என்னை உற்சாகப்படுத்திய பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம், அன்பின் தேவனே என்னைச் சுற்றி வாழ்கிறதான ஜனங்களின் மத்தியில் நீர் என்னை முழுமையாய் பரிசுத்தமாக்கினீர் என்று அவர்கள் காணும்விதமாக நான் ஜீவிக்கும்படி செய்யும். இவை யாவையும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து