இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒரு ஆவிக்குரிய போரில் இருப்பதால், நாம் நம்முடைய ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய தினசரி ஜெபங்களைச் செய்வதற்க்கு மேலாகவும் , நாம் தினசரி வேதாகமத்தை தவறாமல் வாசிப்பதை காட்டிலும் , பின்வரும் வசனங்களில் பவுலானவர் விவரிக்கும் (எபேசியர் 6:13-20) தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தை அடையாளம் காண நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆவிக்குரிய சர்வாயுதவர்கம் , நாம் ஆத்துமப் போருக்குத் தயாராவதற்கு உதவுவதற்காகவும் மற்றும் நமது ஆத்தும பாதுகாப்பிற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது . நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பணியையும், ஒவ்வொரு வேதாகம வார்த்தைகளையும் , ஒவ்வொரு சவாலையும் அவசர உணர்வுடன் அணுக வேண்டும், ஏனென்றால் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம் என்பதை அறிந்திறுக்கிறோம் . தீய நாள் வரும். பொல்லாங்கன் நமக்கு எதிராகத் தன் தாக்குதல்களில் சிலவற்றை நம் இருதயத்தில் ஊடுருவி உள்ளே செல்ல முயல்வான் . எனவே, தேவன் அளித்துள்ள சர்வாயுதவர்க்கத்தையும் அவர் அளிக்கும் வல்லமையையும் பயன்படுத்தி நாம் எதிர்த்து நிற்க்க எப்பொழுதும் தயாராக இருப்போம்.

என்னுடைய ஜெபம்

அன்பான பரலோகத்தின் தகப்பனே, உமது பரிசுத்த ஆவியினால் என்னைப் பெலப்படுத்துங்கள் (எபேசியர் 3:14-21). உம்முடைய பரலோக அழைப்பின் காரணமாக நான் உமக்கு தைரியமாக ஊழியம் செய்ய விரும்புகிறேன். இயேசுவின் மாதிரியை மற்றும் தீயவர்மீது அவர் தொடர்ந்து ஜெயம் பெற்றதன் காரணமாக ஆவிக்குரிய ரீதியில் இன்னும் தைரியமாக இருக்க அவைகள் அடியேனை உற்சாகப்படுத்துகிறது . அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து