இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த மிகப் பெரிதான வசனம் ஒரு சுருக்கமானச் செய்தியை தெரிவிக்கிறது. இந்த பாண்டத்தின் மூலம் கையிட்டு செய்கிறதான காரியங்களில் நாம் தேவனை மகிமை படுத்தக்கடவோம் . நாம் பாவத்துக்கு மரித்திருக்கிறோம், ஆனால் தேவனோ நம்மை ஜீவனுள்ளவர்களாய் வாழும்படி இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலில் பங்கு கொள்வதினால் நம்மை மீட்டெடுத்தார். மரணத்திற்கு கொண்டுசெல்கிறதான அருவருக்கத்தக்க, கொடூரமான பாவங்களுக்கு நாம் மறுபடியும் எப்படி செல்ல முடியும் ? கண்டிப்பாக.., கட்டாயமாக...கூடாதே . இன்னுமாய் தேவனுடைய உதவியுள்ள கிருபையினாலே நாம் அப்படிச் செய்வதில்லை . அவருடைய மகிமைக்காக நாம் நம்மை அர்ப்பணித்து வாழவேண்டும் என்று விரும்பும்போது பரிசுத்தாவியானவரின் வல்லமை அவருக்காக அப்படி வாழும்படி நமக்கு உதவிச்செய்கிறது.
என்னுடைய ஜெபம்
பிதாவே, கிருபையின் தேவனே, கடந்த காலங்களில் பாவத்தில் அமிழ்திருந்த என்னை மன்னித்தருளும். அடியேனை பாவத்திலிருந்து மீட்கும்படி நீர் எவ்வளவு விலையை கொடுத்தீர் என்பதை நான் அறிவேன். நான் சாத்தானின் திறன் எவ்வளவு என்பதையும் அவன் பாவத்தை உபயோகித்து என்னை அதிலே சிக்கவைத்து எப்படி அடிமைப்படுத்துகிறான் என்பதையும் அறிவேன். இயேசு எனது ஆண்டவரென்று ஒப்புக்கொடுத்து உமக்கென்று வாழும்படியும், உம்மை மேன்மைபடுத்தும்படி ஆவியானவர் எனக்கு அதிகாரத்தைத் தந்தருளும்படியும் என்னை ஆசீர்வதியும் . இயேசுவின் நாமத்தில். ஆமென்.