இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரலோகத்தின் தேவன் நம் பாவங்களை மன்னிக்காததை விடவேறே பயங்கரமான காரியத்தை உங்களால் சிந்திக்க முடியுமா? நம் எல்லோருடைய பாவங்களை மன்னிக்க இயேசு எவ்வளவு பெரிய விலையை செலுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியும்! அதினால் கர்த்தர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை நாம் அறிவோம். நம்முடைய பரலோகத்தின் தேவன் நாம் அவரோடு ஒப்புரவாக வேண்டும் என்று எவ்வளவு விரும்புகிறார் என்பதும் நமக்குத் தெரியும். அப்படியென்றால், தேவன் தம்முடைய மன்னிப்பை மிகவும் அதிகமாக நமக்கு அளித்திருக்கும்போது, ​​நம்மில் எவரேனும் மற்றவர்களுக்கு மன்னிப்பை வழங்குவதை ஏன் தடுக்க வேண்டும்? நாம் மன்னிக்காதபோது, ​​நாம் தேவனுடைய மன்னிப்பை கிருபையாக பெறவில்லை அல்லது மற்றவர்களுடன் மன்னிப்பை பகிர்ந்து கொள்ளும் வரை நமது மன்னிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை நாம் மற்றவர்களுக்கு நிரூபிக்கிறோம்! தேவனானவர் கிருபையாக நம்மை மன்னிக்கிறார், அப்படிப்போல மற்றவர்களை மன்னிக்காதவர்களை அவரும் மன்னிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , இன்னும் அநேகரை அடியேன் மன்னிக்க கடினமாக கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். இப்போது, ​​​​நான் ஜெபிக்கும்போது, ​​தயவுக்கூர்ந்து உம் பரிசுத்த ஆவியியை கொண்டு என் இருதயத்தை மென்மையாக்குங்கள், எல்லாவித கசப்பு அல்லது மனவேதனையிலிருந்தும் என் ஆத்துமாவை பரிசுத்தப்படுத்துங்கள், மேலும் கடந்த காலத்தின் வலியை மறந்து மன்னிக்க எனக்கு வல்லமையின் அதிகாரத்தை தாரும் . நான் மன்னிக்கப்படுவதற்கு மாத்திரமல்ல , மற்றவர்களை மன்னிப்பதற்கும் உதவியாக இருந்த இந்த கிருபைக்காக நான் நன்றி கூறுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து