இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

போதனையின் நம்பமுடியாத முக்கியத்துவத்தை இயேசு நமக்கு நினைப்பூட்டுகிறார். அவருடைய சீஷர்கள் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவும் ஆசீர்வதிக்கவும் அவர்களின் சமீபத்திய ஊழிய பயணத்தால் சோர்வடைந்தனர். இயேசுவின் உறவினரும், இயேசுவுக்கு பாதையை ஆயத்தப்படுத்தினவனுமாகிய யோவான் ஸ்நானகன் ஏரோதுவால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதற்காக இயேசு வருந்தினார். திரளான மக்கள் இயேசுவிடமும் அவருடைய சீஷர்களிடமும் அதிக உதவியையும், அற்புதங்களையும், கவனத்தையும் தேடினார்கள். அவருடைய இரக்கத்தினாலும் வல்லமையினாலும் உண்டான பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர் செய்வார் என்று நாம் எதிர்பார்க்கும் அதே வேளையில், மேய்ப்பனில்லாத ஆடுகளுக்கு நல்ல, திடமான, எளிமையான , நடைமுறை போதனைகள் தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார், அவர் அவர்களை நன்கு கவனித்துக்கொள்கிறார். மக்களுக்கு ஆத்துமாவுக்கு உணவும், இன்னுமாய் வயிற்றை நிரப்ப உணவும் தேவை என்பதை அவர் அறிந்திருந்தார் .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , ஆற்றல்மிக்க, இரக்கமுள்ள மற்றும் பயனுள்ள ஆசிரியர்களைக் கொண்டு உம்முடைய திருச்சபையை ஆசீர்வதித்தருளும் . உம்முடைய மக்களுக்கு, உம் ஆடுகளுக்கு, உம்முடைய திருவார்த்தையின் மீது வாஞ்சையையும் மற்றும் அதை அவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த எங்களுக்கு ஆவலையும் தாரும் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து