இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ரோமர் 6ஆம் அதிகாரத்தில், தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவது என்பது நாம் கையாளப்படுகிறோம் அல்லது சுயமான விதிகள் அல்லது சட்டங்களின் கீழாய் வைக்கப்படுகிறோம் என்று அர்த்தமல்ல என்று பவுலானவர் வலியுறுத்துகிறார். நம் கிருபை நிறைந்த தேவனிடமிருந்து உண்டாகும் கீழ்ப்படிதல் என்பது இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தின் மூலமாய் உண்டாகும் விடுதலை என்பது நமது பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும், மரணத்தின் நிச்சயத்திலிருந்தும் விடுதலை, அந்த பாவத்தின் துன்புறுத்தும் நினைவுகளிலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் விடுதலை மற்றும் நாம் சுயாதினமாய் உருவாக்கப்பட்ட மனிதர்கள் அதற்காகவே விடுதலை ! இந்த சுதந்திரம் தேவனுடைய கிருபையில் வேரூன்றியுள்ளது (ரோமர் 6:14) மற்றும் ஞானஸ்நானத்தில் விசுவாசத்தின் மூலம் இயேசுவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் நாம் பங்கேற்பதாகும் (ரோமர் 6:3-7). இயேசுவின் மேல் கீழ்ப்படிதலுள்ள விசுவாசத்தின் மூலம் நாம் விடுதலையாக்கப்பட்டோம் !

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே , உமது விருப்பத்திற்குக் கீழ்ப்படிவது ஒரு ஆசீர்வாதம் மாறாக அது ஒரு கட்டுப்பாடு அல்ல என்பதை என் தலை புரிந்துகொள்கிறது. என்னைப் பாதுகாக்கவும் இரட்சிக்கவும் உனது சத்தியத்தைக் கொடுத்தீர் என்பதை நான் அறிவேன். இயேசுவை அனுப்பியதால் இந்த சத்தியத்தை வெளிப்படுத்தினீர் , எனவே நான் முழு மனதுடன் உம் விருப்பத்திற்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன். சில சமயங்களில் சந்தேகப்படுவதற்கும், வேறு காரியங்களில் மகிழ்ச்சியையும் , சந்தோஷத்தையும் தேடினதற்காகவும் என்னை மன்னியுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து