இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நேற்று, சாலொமோன் ஆலயத்தின் அர்ப்பணிப்பு உரையை வேதவசனங்கள் நமக்கு நினைப்பூட்டின. ஆச்சரியமான வகையில், பவுலானவர் இன்றைய வசனத்தில், பரிசுத்த ஆவியின் மூலமாய் தேவன் நமக்குள் வாசம் செய்யும்படி விரும்புகிறார் என்று நமக்கு வலியுறுத்துகிறார். சாலொமோனின் காலத்தில் எருசலேம் ஆலயம் இருந்ததைப் போலவே தேவனானவர் நாம் வாழும் நாட்களில் நமக்குள் வல்லமையாய் ஜீவிக்கிறார் . தேவனின் பரிசுத்த வாசஸ்தலமாக நம்மை ஏற்றுக்கொள்வது என்பது அவருக்கு ஒரு பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாய் இருந்தது - அவருடைய ஒரே பேறான குமாரனின் மரணம்! நம்மில் அவருடைய பரிசுத்தமுள்ள ஆவிக்குரிய பிரசன்னத்தை நாம் எவ்வாறு கனப்படுத்த மறுக்க முடியும்? அவர் நமக்கு அளித்த கிருபைக்கு பதிலாக நாம் எப்படி ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழாமல் இருக்க முடியும் ?
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே, எனக்குள் இருக்கும் உம்முடைய மகிமையான பிரசன்னத்தையும் அதின் ஆச்சரியத்தையும் நான் இழந்த நேரங்கள் இருப்பதையும் நான் அறிவேன், அதற்காக அடியேனை மன்னித்தருளும் . உம் பரிசுத்த ஆவியின் ஈவு ஆச்சரியமான மற்றும் மாபெரிதான கிருபையாகும். மீண்டும் ஒருமுறை, பிதாவே , உம்முடைய ஆலயமாக நாங்கள் எப்பொழுதும் உம்மை பிரியப்படுத்தவும், கனப்படுத்தவும் என் சரீரத்தை ஒரு ஜீவனுள்ள பலியாக ஒப்புவிக்க உறுதியளிக்கிறேன். அதே சமயம், உம் பரிசுத்த வாசஸ்தலமாக உம்மை மகிமைப்படுத்த, உம் பரிசுத்த ஆவியின் பிரசன்னமும் வல்லமையும் எனக்குத் தேவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். உமது பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்கும் வல்லமையினாலும் பிரசன்னத்தினாலும் என்னை வழிநடத்தி, பரிசுத்தப்படுத்தி, சுத்திகரித்து, ஒவ்வொரு நாளும் என்னை இயேசுவைப் போல் ஆக்கும் . இயேசுவின் நாமத்தினாலே , நான் இதைக் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.