இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த சங்கீதத்தின் துவக்கமானது ஒரு நம்பிக்கையற்ற (விரக்தி ) சூழலில் துவங்கினாலும், இதில் நம்மால் விசுவாசத்தின் வளர்ச்சியைக் காணமுடிகிறது . காரியங்கள் இருள்சூழ்ந்தார் போல் இருக்கலாம், ஆனால் தேவன் அவருடைய பிள்ளைகளைக் p கைவிடுவதில்லை. தேவனுக்குப் பயந்து நடுங்குகிறவர்களை அவர் மறப்பதில்லை. அவர் அவர்களுடைய பிள்ளைகளை புறக்கணியாமல், அவர்களுக்கென்று வைத்திருக்கிறதான நன்மைகளை தாராளமாய் அவர்கள் மீது பொழிந்து இவர்கள் தம்முடைய பிள்ளைகளென்று காண்பிக்கிறார் . அவரை அடைக்கலமாய் கொண்டுள்ளவர்கள் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவார்கள். இயேசுவின் உயிர்தெழுதலை அறிந்து அவருக்குள்ளாய் வாழ்பவருக்கு இந்த நீதியின் ஆசீர்வாதமான வாக்குறுதி அவர்களை ஆழமான நிலை , அர்த்தம் அத்துடன் ஆழமான நம்பிக்கைக்கும் கொண்டுபோகிறதாய் இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே!ஆபிரகாம், மோசே, ரூத், தாவீது மற்றும் எஸ்தர் என்பவர்களின் தேவனே. பல நூற்றாண்டுகளாக நீர் காண்பித்த உம்முடைய உண்மைக்காக உம்மை துதிக்கிறோம். உமது கிருபையினால் என்னை நினைப்பதற்கும் , உமது வல்லமையினால் என்னை பாதுகாப்பதற்கும் , உமது நன்மையினால் என்னை ஆசீர்வதிப்பதற்கும் நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்ளும்படி நீர் காண்பித்த மாபெரிதான விசுவாசத்தின் பாரம்பரியத்திற்காக உமக்கு நன்றி. அடியேன் எதிர்க் கொள்ளும் எவ்வகையான சோதனையிலும், போராட்டங்களிலும் என்னுடைய விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்ளும்படி தயவுகூர்ந்து தைரியத்தைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபித்து என் நம்பிக்கையை உம்மீது வைக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து