இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தாவீதின் மனைவி மீகாள் , தனது கணவரான தாவீது ராஜாவை கேலி செய்தார், அவருடைய "அற்பமான " உற்சாகத்திற்காக, அதாவது தாவீது ராஜா மகிழ்ச்சியுடன் உடன்படிக்கைப் பெட்டி திரும்பி வரும்போது அதற்கு முன்பாக பாடி நடனமாடினார். வெளிப்படையாக, தாவீது மீகாளின் பார்வைக்கு அரசனாக தோன்றவில்லை. ஆயினும் , தாவீது தனது மனைவியின் அந்த விமர்சனத்தால், தேவனை மகிழ்ந்து களிக்கூருவதில் சோர்ந்துபோகவில்லை . உடன்படிக்கை பெட்டி திரும்பி வந்தது கொண்டாட்டத்திற்கு ஒரு காரணமாகும் . அவனுடைய தேவன் ஒரே உண்மையான மற்றும் ஜீவனுள்ள தேவன். ஆபத்தான எதிரிகளை தொடர்ந்து வெற்றியின் மேல் வெற்றியை அவனுடைய தேவன் அவனுக்கு கொடுத்தார். சவால்கள், அடக்குமுறைகள், அலைந்து திரிதல் மற்றும் சண்டைகள் ஆகியவற்றின் நீண்ட வரலாற்றில் அவர்களுடைய தேவன் தனது மக்களுடைய கஷ்டங்களிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் விடுவித்து காப்பாற்றினார். தாவீது தனது ஆனந்த சந்தோஷத்தில் , தன் முழு இருதயத்தோடும், ஆடிப் பாடி கொண்டாடினான் , அவன் தன் இஸ்ரவேலின் தனது ஸ்தானத்தை பற்றி கவலைப்படாமல் கர்த்தருக்கு முன்பாக கொண்டாடத் தீர்மானித்தார். தேவன் இந்த விடுதலை நாளைக் கொண்டுவந்தார், எனவே தாவீது, "கர்த்தருடைய சமூகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்" என்று அறிவித்தார். நாமும் கூட அப்படியாய் தேவ சமூகத்தில் உற்சாக மனதோடே பாடக் கூடாதா?
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் கிருபையும், இரக்கமும் நிறைந்தவர், வல்லமையிலும் பரிசுத்தத்திலும் அற்புதமானவர்; நீரே என் மகிழ்ச்சி, என் நம்பிக்கை மற்றும் என் எதிர்காலம். எல்லா மகிமைக்கும் , மாட்சிமைக்கும் , புகழுக்கும் நீர் மாத்திரமே பாத்திரராக இருப்பதற்காக உம்மில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆண்டவரே, நான் உம்மைக் கொண்டாடுவேன், ஏனென்றால் நீர் மாத்திரமே எல்லா புகழ்ச்சிக்கும், ஸ்தோத்திரத்துக்கும் உகந்தவர் ! இயேசுவின் நாமத்தினாலே , ஆனந்த சத்தமிட்டு ஜெபிக்கிறேன், அல்லேலூயா, ஆமென்.