இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நானும் என் சகோதரர்களும் ஒன்றாக வளரும்போது, ​​​​பாவம் அநேக நேரங்களில் ஒரு நல்ல காரியத்திற்கான ஒரு தவறான குறுக்குவழி என்பதை எங்களுடைய தாய் தொடர்ந்து எங்களுக்கு நினைப்பூட்டி வந்தார்கள் . அநியாயமாக பெற்ற பொக்கிஷங்கள் யாவும் ஐசுவரியத்திற்கான குறுக்குவழியாகத் தோன்றலாம், ஆனால் அவை சாத்தானின் வஞ்சக வலை. எனவே, அநியாயமான செல்வம் ஒரு வளமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கைக்கான பாதை அல்ல என்று பரிசுத்த ஆவியானவர் இங்கே நமக்கு நினைப்பூட்டுகிறார். ஆவிக்குரிய வாழ்வே என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு நித்தியமான வாழ்வாகும் - அதுவே விலையேறப் பெற்றதாகும். அதை தேவனைப் பற்றிக்கொண்டு நீதியோடு வாழ்வதினால் மாத்திரமே பெற முடியும்.

என்னுடைய ஜெபம்

உதாரத்துவமும், அன்பும் கொண்ட பிதாவே , பொறாமையிலும், என்னைச் சூழ்ந்திருக்கும் செல்வச் செழிப்புக் கலாச்சாரத்திலும் சிக்கிக்கொண்டதற்காக அடியேனை மன்னித்தருளும் . சாத்தானின் வஞ்சகங்களை எதிர்ப்பதற்கும், நீர் எனக்கு கொண்டுவர விரும்பும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்கும் எனக்குத் தேவையான பொறுமையையும் நீதியையும் என்னில் உண்டாக உமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துவீராக . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து