இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நானும் என் சகோதரர்களும் ஒன்றாக வளரும்போது, பாவம் அநேக நேரங்களில் ஒரு நல்ல காரியத்திற்கான ஒரு தவறான குறுக்குவழி என்பதை எங்களுடைய தாய் தொடர்ந்து எங்களுக்கு நினைப்பூட்டி வந்தார்கள் . அநியாயமாக பெற்ற பொக்கிஷங்கள் யாவும் ஐசுவரியத்திற்கான குறுக்குவழியாகத் தோன்றலாம், ஆனால் அவை சாத்தானின் வஞ்சக வலை. எனவே, அநியாயமான செல்வம் ஒரு வளமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கைக்கான பாதை அல்ல என்று பரிசுத்த ஆவியானவர் இங்கே நமக்கு நினைப்பூட்டுகிறார். ஆவிக்குரிய வாழ்வே என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு நித்தியமான வாழ்வாகும் - அதுவே விலையேறப் பெற்றதாகும். அதை தேவனைப் பற்றிக்கொண்டு நீதியோடு வாழ்வதினால் மாத்திரமே பெற முடியும்.
Thoughts on Today's Verse...
As my brothers and I grew up, our mom regularly reminded us that sin is often a false shortcut to a good thing. Ill-gotten treasures may seem like a shortcut to riches, but they are a trap. So, the Holy Spirit reminded us in this passage that ill-gotten riches are not the path to a bountiful and satisfying life. Lasting value — spiritual worth that lives beyond our physical lifetimes — can only be acquired through godliness.
என்னுடைய ஜெபம்
உதாரத்துவமும், அன்பும் கொண்ட பிதாவே , பொறாமையிலும், என்னைச் சூழ்ந்திருக்கும் செல்வச் செழிப்புக் கலாச்சாரத்திலும் சிக்கிக்கொண்டதற்காக அடியேனை மன்னித்தருளும் . சாத்தானின் வஞ்சகங்களை எதிர்ப்பதற்கும், நீர் எனக்கு கொண்டுவர விரும்பும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவதற்கும் எனக்குத் தேவையான பொறுமையையும் நீதியையும் என்னில் உண்டாக உமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துவீராக . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன், ஆமென்.
My Prayer...
Generous and loving Father, please forgive me for getting caught up in envy and the culture of affluence that suffocates and surrounds me. Please use your Spirit to develop in me the patience and righteousness I need to resist the deceptions of Satan and to pursue the fullness of life you long to bring me. In Jesus' name, I pray, Amen.