இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இப்பூமியில் நாம் இருக்கும்போது, தடுமாறிநின்ற வேளைகளிலே எல்லாவற்றையும் நம்மால் புரிந்துக்கொள்ள இயலுவதில்லை (பார்க்க சங் 73:1-22), இருப்பினும் தேவனானவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதினால் நம்மால் ஆறுதல் அடையமுடிகிறது. இந்த உலகத்தில் நாம் அறிந்த மற்றும் வைத்திருக்கிறதான எல்லாக் காரியங்களும் அழியக் கூடியதாய் இருக்கிறது, ஆனால் நாம் ஆண்டவருடனே கொண்டுள்ளதான உறவு நமக்கு நித்ய பெலனாய் இருக்கிறது. அவர் நம்மை புறக்கணியாமலும் , தோல்வியடையச் செய்யாமலும் அல்லது மறவாமலும் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, குறிப்பாக வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலையிலும், அச்சம் அதிக தொந்தரவாக இருந்த நேரத்திலும் நீர் எப்பொழுதும் என் கூடவே இருப்பதற்காக உமக்கு நன்றி. உம்மண்டையில் உண்மையுள்ள கேள்விகள் கேட்கும்போது மாத்திரமல்லாமல் உம்மில் நம்பிக்கையுள்ள ஜனத்திற்கு காரியங்கள் நன்மையாய் அமையாத வேளையிலும் உம்மீது நம்பிக்கையோடு இருந்து விசுவாசத்தை பெற்றுக் கொள்ளும்படி தயவாய் கேட்கிறேன். உமது ஜனத்தின் வல்லமையான நியாயதீர்ப்புக்காக நான் காத்திருக்கும்போது, விசுவாசத்தில் உறுதியாய் பற்றிக்கொண்டிருக்க எனக்கு தயவாய் உதவிச்செய்யும்.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து