இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சகரியா தனது தீர்க்கதரிசன புஸ்தகத்தில் இஸ்ரவேலின் பிரயோஜனமற்ற மேய்ப்பர்களை சாடினார் . திருச்சபையின் ஊழியர் அல்லது போதாகர் என்பது ஒரு அசாதாரணமான மற்றும் பயபக்தியுடனான பொறுப்பு என்றும், மரியாதைக்குரிய பணிவுடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் பவுலானவர் சபையின் மேய்ப்பர்களை எச்சரித்தார் (அப்போஸ்தலர் 20:17-38). நல்ல மேய்ப்பரான இயேசு (யோவான் 10:10-18) தம்முடைய மகிமையில் திரும்ப வரும்போது அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வார் என்பதை சபையின் தலைவர்களாக, ஊழியர்களாக ஆவதன் மூலம் அந்தஸ்து அல்லது சலுகைகளை தேடுபவர்கள் அறிந்திருக்க வேண்டும். தேவனுடைய மக்களை துஷ்பிரயோகம் செய்த அல்லது தேவனின் மந்தையை மேய்க்கும் அவர்களின் மேன்மையான பொறுப்பை தவறாகப் பயன்படுத்திய எவரும் கடுமையான தீர்ப்பைப் பெறுவார்கள். இருப்பினும், மேய்ப்பராக இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பவர்கள் தாராளமாக வெகுமதி பெறுவார்கள் (1 பேதுரு 5:1-4).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள மேய்ப்பரே, உம்மை அதிகமாய் நேசிக்கும் மற்றும் உம்முடைய ஆடுகளை ஆர்வத்துடன் பராமரிக்கும் தகுதியான மேய்ப்பர்களால் உம் திருச்சபையை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் . இந்த உண்மையுள்ள தலைவர்கள் உமக்கும், உம்முடைய ஆடுகளுக்கும் தங்களுடைய பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றும்போது, ​​உம்முடைய மாறாத சமூகம் , உதவி மற்றும் மகிழ்ச்சியை அவர்களுக்கு தந்தருளும் . எங்கள் பாவங்களுக்காக கொல்லப்பட்ட உம்முடைய ஆட்டுக்குட்டியான இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து