இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவின் உதாரணத்திற்கு வெளியே பார்ப்போமானால் , இந்த கட்டளைக்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை. ஆனால் நம்முடைய எதிர்காலத்தை நம் சிருஷ்டிகரும் பிதாவுமானவரின் கரங்களில் விட்டுவிடுவதன் முக்கியத்துவத்தை இயேசு நமக்குக் காண்பிக்கிறார் . மேலே சொன்ன பிரகாரமாக யோசிக்கும்போது , இது சரியான அர்த்தத்தைத் தருகிறது. எதிரியை தோற்கடிக்க சிறந்த வழி எது? நிச்சயமாக, அது அந்த நபரை அடிப்பதோ,கொல்வதோ , நம் எதிரிகளை நாம் தோற்கடிக்கும் வழி அல்ல , இயேசுவின் கிருபை அவர்களின் இருதயங்களைக் கைப்பற்றுவதும், அவர்களின் குணாதிசயங்கள் நம் ராஜாவுக்கு இணங்குவதும், நாம் கர்த்தருக்காக வாழும்போது அவர்களும் நம்மோடு இணைவதும்தான்! அப்படித்தான் நாம் எதிரிகளை வெல்வோம்; நாங்கள் அவர்களை இயேசுவிடம் கொண்டு வருகிறோம், அவர்கள் கிறிஸ்துவுக்குள் நம் சகோதர சகோதரிகளாக மாறுகிறார்கள்.
என்னுடைய ஜெபம்
அன்பான மற்றும் கிருபையுள்ள பிதாவே , தயவுசெய்து என் இருதயத்தை மென்மையாக்குங்கள் மற்றும் என் தீர்மானத்தை கடினமாக்குங்கள், அப்பொழுது நான் இயேசுவானவர் நேசித்ததைப் போல நானும் நேசிக்க முடியும். குறிப்பாக என்னை எதிர்ப்பவர்களுக்கும், வெறுப்பவர்களுக்கும், கேலி செய்பவர்களுக்கும், சிறுமைப்படுத்துபவர்களுக்கும், உதாசினம்பண்ணுபவர்ள் போன்ற மக்கள் இடையே என் வாழ்க்கையை மீட்பதாக ஆக்குங்கள். அன்பான பிதாவே , மற்றவர்களை இயேசுவின் கிருபைக்கு கொண்டு வர என்னை பயன்படுத்துங்கள். அவருடைய நாமத்தினாலே , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.