இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சர்வவல்லமையுள்ளவரே! தேவனுடைய நாமங்களில் இதுவும் ஒன்று. நல்லவர், உண்மையுள்ளவர் , பரிசுத்தர் , இன்னும் பலவற்றை நாம் யோசித்து போற்றக்கூடிய அனைத்தும் அவர்தான்! எனவே, பழைய ஏற்பாட்டிலே தேவனுக்கு அநேக நாமங்கள் உள்ளன. ஏனென்றால் தேவனானவர் நாம் கற்பனை செய்வதை விட மிகவும் பெரியவர். நாம் நினைக்கிறதற்கும் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் மேலாய் அவர் இன்னும் அதிகமாய் செய்ய வல்லவர் . அவர் நாம் கூறும் வார்த்தைகளை விட மிகவும் மேன்மையானவர் . நம்முடைய அசாதாரணமான துதிகளை தேவனுடைய மகிமையோடு ஒப்பிடும்போது அவைகள் ஒன்றுமில்லை . எனவே நாம் 106 ஆம் சங்கீத்தோடு சேர்ந்து பயபக்தியுடன் கூறுவோம் : "கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்? " பதில் எளிது: யார் ஒருவரும் இல்லை! எவ்வாறாயினும், நம் ஆண்டவருக்கும், தேவனுக்கும் நன்றி செலுத்துவதிலிருந்து எதுவும் நம்மைத் தடுக்காது, அவருடைய மகத்துவத்தை நம்மால் ஆராய்ந்து முடியாது, அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!

என்னுடைய ஜெபம்

எல் -ஷடாய் , ஒரே மெய்யான மற்றும் சர்வவல்லமையுள்ள தேவன் , நீர் எல்லா மகிமைக்கும், கனத்திற்கும் , புகழுக்கும் தகுதியானவர்! உம்மை பாராட்டுவதற்கான எனது பலவீனமான சத்தத்தை கேட்டதற்காக உமக்கு நன்றி. எனது அன்பின் வெளிப்பாடுகள் மற்றும் உமக்கு நன்றி தெரிவிக்கும் முயற்சிகள் உமக்கு தகுதியானதை விட மிகவும் குறைவாக இருந்தபோதிலும் , அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அடியேனை ஆசீர்வதித்ததற்க்காக உமக்கு நன்றி. நீர் என் வார்த்தைகளை காட்டிலும் மிகவும் அற்புதமானவர் மற்றும் என் மனதின் யோசனைக்கு அப்பாற்பட்டவர். நான் மகிழ்ச்சியுடன் என் நம்பிக்கையையும் என் எதிர்காலத்தையும் உம் கரங்களில் வைத்திருக்கிறேன்! இயேசுவின் அற்புதமான நாமத்தின் மூலமாய் , என் ஸ்தோத்திரங்களை செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து