இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"உங்களுடைய வாழ்வாதாரம் என்ன?" இந்த கேள்வி அநேக கலாச்சாரங்களின் மத்தியில் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளில் இவை ஒன்றாகும். நாம் கையிட்டு செய்யும் வேலைகளின் மூலமாக நாம் ஒருவரையொருவர் பெரிய அளவில் வரையறுக்கிறோம். ஆனால் , பரலோகத்தின் தேவனோ தம்முடைய கிருபையான அன்பினாலும, நாம் இயேசுவின் மீது வைத்துள்ள விசுவாசத்தினாலும் நம்மை வரையறுக்கிறார். நாம் நிறைவேற்ற வேண்டிய ஊழியம் , இயேசுவின் சீஷர்களாக நாம் "நம்முடைய வாழ்வாதாரத்தை உருவாக்க" அவர் விரும்பும் விதம், இயேசுவை முழுமையாக விசுவாசிப்பதும் , மற்றவர்கள் இயேசுவை விசுவாசிக்க உதவுவதும் ஆகும். தேவன் இயேசுவானவரை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்று விசுவாசிப்பது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் புதிய துவக்க இடம் மட்டுமல்ல; தேவனானவர் நம் வாழ்கையில் கிரியை நடபிக்கும் இடமாகும் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , வானத்தையும் பூமியையும் ஆளுகை செய்பவரே, நான் இயேசுவை முழுமையாய் விசுவாசிக்கிறேன் , ஆனால் சில நேரங்களில் உண்டாகும் என் அவநம்பிக்கை நீங்க உதவுங்கள் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து