இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாகிய நாங்கள் , இந்தத் தீர்க்கதரிசனம் கர்த்தருடைய வருகையைப் குறித்து பேசுகிறது என்று நம்புகிறோம். ஆகவே, நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசு பிரகடனப்படுத்தியபோது, தம்முடைய ஆடுகளாகிய நமக்காகத் தம்முடைய ஜீவனை கொடுத்ததின் மூலம் அதை அவர் நிரூபித்து காண்பித்தார் ! எவ்வாறாயினும், இயேசு நம்முடைய "நல்ல மேய்ப்பன் " இது தீர்க்கதரிசியாகிய மீகா வாக்களித்த அனைத்தையும் குறிக்கிறது - பெலன் , மகத்துவம், பாதுகாப்பு. , சமாதானம் மற்றும் இன்னும் அநேக காரியங்கள் (யோவான் 10:10-18). நம்முடைய மேய்ப்பராகிய இயேசு, இன்றும் என்றென்றும் நமக்கு எல்லாமுமாய் இருக்கிறார் ! நம்முடைய நித்திய ஜீவன் அவருடைய கரங்களில் இருப்பதை அறிந்து நாம் பாதுகாப்பாக வாழ்கிறோம். அவர் மறுபடியுமாய் மகிமையிலே திரும்பி வரும்போது நாமும், அந்த மகிமையிலே அவருடன் பகிர்ந்து கொள்வோம் என்பதை அறிந்திருக்கிறோம் (கொலோசெயர் 3:1-4). எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவே நமக்கு நித்திய ஷாலோமாய் இருக்கிறார் என்பதை உறுதியளிக்கிறார் - நம் வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில் வெறும் அமைதலை விட, அவரோடக்கூட அந்த நித்திய மகிமையிலே பிரவேசிக்கும் அந்த நாள் மட்டும், நம்முடைய வாழ்க்கையின் போராட்டம், பிரச்சனைகளின் மத்தியிலே நமக்கு சமாதானமுள்ள ஜீவியம் உண்டென்று வாக்களித்திருக்கிறார்.
என்னுடைய ஜெபம்
அன்பும்,நித்தியமுமுள்ள தேவனே , இயேசுவை என் பாவத்திற்கான ஜீவ பலியான மேய்ப்பராக அனுப்பியதற்காக உமக்கு மிக்க நன்றி. அலைந்து திரிகிற உலகில், அவருடைய பெலன் என்னைத் தாங்குகிறது, அவருடைய மகத்துவம் என்னை ஆட்கொள்கிறது, மேலும் அவருக்குள்ளாய் , நான் எதிர்காலத்தை எதிர்கொள்ளும்போது என் பாதுகாப்பையும் அமைதியையும் காண்கிறேன். இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் உங்களுக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.