இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யார் அல்லது எது உங்களைப் துன்பப்படுத்துகிறது? இது கடந்த கால தவறா? அல்லது பழைய எதிரியா? உங்கள் வாழ்க்கையில் ஒரு போதை பழக்கத்திற்கு அடிமையானது உங்களை கீழே இழுத்துச் செல்கிறதா? உங்கள் மனசாட்சியா? ஒரு குற்ற உணர்ச்சியா? உங்களுக்கு சரீர பிரகாரமாக உங்களுக்கு தீங்கு செய்ய விரும்புபவரா? உடல் சார்ந்த ஒரு தீரா வியாதியா ? நீண்ட நாட்களாய் உங்களை அச்சுருத்தும் காரியமா? அல்லது உங்கள் எதிர்காலத்தைப் குறித்த ஒரு நிச்சயமற்ற தன்மையா? நாம் பயப்படக்கூடிய மற்றும் துன்பப்படுத்துகிற அநேக விஷயங்கள் நம்மிடம் உள்ளன - நாம் பயப்படும் இந்த விஷயங்கள் நம்மைப் துன்பப்படுத்துகின்றன என்ற நீடித்த உணர்வு. எனவே மிக முக்கியமான கேள்வி என்னவென்றால்: வாழ்க்கையின் அனைத்து புயல்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் காண நாம் எங்கு செல்வது? மெய்யான மற்றும் நிலையான அடைக்கலமாக இருக்கக்கூடியவர் ஒருவர் மாத்திரமே . அவர் ஒருவரே : கர்த்தராகிய தேவன்! இந்த பரலோகத்தின் தேவனிடம் நீ அடைக்கலம் புகுந்தால் நம்மை விடுவித்து இரட்சிக்க ஏங்குகிறார் !

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே, நீரே என் அடைக்கலமும் பெலத்தின் ஆதாரமுமாய் இருக்கிறீர் . என் தைரியம் போய்விட்டது, என் ஆத்துமா சோர்வாக இருக்கும்போது இது குறிப்பாக உண்மையான காரியமாகும் . தயவு செய்து, அன்பான பிதாவே , என்னைத் துன்பப்படுத்தும் அனைத்து சக்திகளையும், எதிரிகளையும் அழித்து, என்னை சிறைப்பிடித்து, உம்மிடமிருந்து என்னை பிரித்து இழுக்க முற்படும் எல்லா காரியங்களிலிருந்து இரட்சித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே , நீரே என் அடைக்கலம் என்று நான் நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து