இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம் இருதயத்தில் உள்ளவைகளே கடைசியாக நம் அனுதின வாழ்வில் வெளிவருகின்றன என்று இயேசு சொன்னார். நீதிமொழிகளின் மகா ஞானியானவர் நம் இருதயத்தை பாதுகாக்கச் சொன்னார், ஏனென்றால் அதுவே நம் வாழ்வின் ஜீவ ஊற்றாய் இருக்கிறது . தேவன் நம் இருதயத்தை அறிந்திருக்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எரேமியா தீர்க்கதரிசி விரும்புகிறார். ஹார்ட்லைட்டில், நம் இருதயத்தில் என்ன நடக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறோம், ஏனென்றால் அது உண்மையில் நம் இருதயத்திற்குள் என்ன நடக்கிறது என்பதில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், படிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் அவைகளில் தேவனை அழைக்க வேண்டும் . நம் இருதயத்திலிருந்து வஞ்சகத்தை அகற்றும்படியும், நீங்கள் கையிட்டு செய்வது உங்கள் நேரத்திற்கும் ஆர்வத்திற்கும் தகுதியானதா என்பதைப் பார்க்க உதவுவும்படியும் அவரை நோக்கி கேட்டுக்கொள்ளுங்கள் .
என்னுடைய ஜெபம்
நீதியுள்ள பிதாவே, தயவு செய்து என் இருதயத்தை பாதுகாத்துக் கொள்ளவும், உமக்குரிய பய பக்தியைப் பறிக்கும் விஷயங்களில் என் இருதயத்தை வைக்காதபடி ஞானமாக இருக்கவும் எனக்கு உதவுங்கள். நான் பரிசுத்தமாக இருக்க விரும்புகிறேன். தயவு செய்து என்னைத் தேடி விசாரித்து , உம்மிடமிருந்து எனது பயபக்தியை பறிக்கக்கூடிய மற்றும் உமக்காக மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விஷயத்தை கெடுக்கும் அனைத்தையும் அகற்ற எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.