இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவானவர் கவலைப்படுகிறார்! மற்றவர்களிடம் - குறிப்பாக கிறிஸ்துவுக்குள் உள்ள மற்ற சகோதர சகோதரிகளிடம் நாம் விமர்சன மனப்பான்மையைக் கொண்டிருப்பதை அவர் விரும்பவில்லை. அவர்களுடைய நோக்கங்களை நாம் நியாயந்தீர்ப்பதை அவர் விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மற்றொரு நபரின் இருதயத்தின் நினைவுகளை நாம் அறிய முடியாது; தேவன் மாத்திரமே எல்லாவற்றையும் அறிய முடியும். நாம் நியாயமற்ற முறையில் விமர்சிக்கும்போது, அதிகப்படியான கடுமையான மற்றும் தேவையற்ற தீர்ப்பளிக்கும் போது, நாம் மற்றவர்களுக்குப் பயன்படுத்திய அதே தரத்தின்படியே தேவன் நமக்கும் பயன்படுத்துவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களை குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் எனக்கு கிருபை வேண்டும். நான் நேசிப்பவர்களுக்கும் , நான் இயேசுவுக்குள் ஐக்கியம் கொண்டவர்களுக்கும் அவ்வாறே செய்யுங்கள். மேலும், இயேசுவை அறியாதவர்களிடம் "சாந்தத்தோடும் வணக்கத்தோடும் " (1 பேதுரு 3:15) உபசரித்து பேசுவதன் மூலம் அவர்களை கிறிஸ்துவுக்காக வெற்றி பெற முயற்சிக்கிறேன். எனவே, பரலோகத்தின் தேவன் என்னுடன் கிருபையாய் இருப்பது போல அடியேனும் மற்றவர்களிடம் இரக்கத்தை காண்பிக்க நான் மிகவும் கடினமாக முயற்சி செய்வேன். தனிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையில் நான் சமரசம் செய்துகொள்கிறேன் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை; நான் அன்பினால் தூண்டப்பட்டவன் என்று அர்த்தம்.
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே, நான் மற்றவர்களை தீர்க்க வேண்டிய அளவை விட மிக அதிகமாக விமர்சித்த காலங்களுக்காக அடியேனை மன்னித்தருளும் . மற்றவர்கள் மீது இரக்கத்தை காண்பிக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தைத் இன்னும் அதிகமாய் உற்சாகப்படுத்துங்கள் , அதனால் உம்முடைய கிருபை , தயவு மற்றும் இரக்கம் என்னில் பிரகாசிப்பதை அவர்கள் பார்க்க முடியும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.