இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பாவம் ஒன்றும் புதிதல்ல. கடந்த காலத்தில் தேவனுடைய மக்களின் முட்டாள்தனத்தையும் துரோகத்தையும் பார்க்க வேதத்தின் பரிசுத்த வார்த்தை நமக்கு உதவுகிறது. அவர்கள் இழந்து போன வாய்ப்புகள் மற்றும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே கொண்டு வந்த பேரழிவுகளால் நாம் குற்றவாளிகளாக இருக்க வேண்டும், மேலும் அவர்களின் தவறுகள், விரோதமான காரியங்கள் மற்றும் பாவங்களை மீண்டும் செய்யக்கூடாது. அவர்களுக்கும் நமக்கு இடையே எவ்வளவு சிறிய வித்தியாசம் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் தேவன் மீது நமக்கு உள்ள ஆர்வத்தை புதுப்பித்துக்கொண்டு இன்னும் அதிக விசுவாசத்தோடே தேவனை பின்பற்ற வேண்டும் !
என்னுடைய ஜெபம்
பிதாவே , கடந்த காலத்தில் வேதாகமத்தில் உள்ளவர்களின் பாவங்கள் உம்மையும், உம் காரணத்தையும் பாதித்தது போல என்னுடைய பாவம், உமக்கு விரோதமான காரியங்கள் மற்றும் துரோகம் என் காலத்திலும் உம்மை விசனப்படுத்தியது என்பதை நான் அறிவேன். உமக்கு பரிசுத்தமாகவும், மகிழ்ச்சியாகவும், என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் வாழ நான் விரும்புவதால், தயவுசெய்து என்னை மன்னித்து பெலப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.