இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மிடம் இருப்பதையும், நாம் வசிக்கும் இடத்தையும், நம் வாழ்க்கையில் நமக்கு நன்மையை கொண்டுவரும் நண்பர்களையும், நாம் சொந்தமாக குடியிருக்க ஓர் இடத்தைத்யும் அதிலே சுகித்து வளரும்படியாய் வழி வகுக்கும் குடும்பத்தையும் நாம் அடிக்கடி சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். இவையனைத்தும் பரலோகத்தின் தேவனானவர் நமக்கு கொடுக்கும் நன்மையான ஈவு . நாம் அவைகளுக்கு எவ்வளவேணும் தகுதியற்றவர்கள். ஆவிக்குரிய உரிமை அல்லது இன அந்தஸ்து மூலம் அவைகள் நம்முடையது அல்ல. இந்த ஆசீர்வாதங்களை நாம் சம்பாதிக்கவில்லை, ஆனால் நாம் நிச்சயமாக அவற்றை அழிக்க முடியும். நாம் கீழ்ப்படிதலுடன் வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அவரைப் பிரியப்படுத்த மாத்திரமல்ல , நம்மையும் நாம் நேசிக்கிறவர்களையும் பாதுகாக்க வேண்டும். எனவே, நமது செயல்களைச் சீர்ப்படுத்தி , நமக்காக மாத்திரம் வாழாமல் இயேசுவுக்காக முழுமையாய் ஒப்புக்கொடுத்து வாழ்வோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்த பிதாவே அடியேனுடைய எல்லா பாவங்களையும் தயவுக்கூர்ந்து மன்னித்தருளும். நான் அவற்றை அடியேன் செய்தேன் என்று முழுமையாய் ஒப்புக்கொள்கிறேன், அவற்றைச் செய்ததற்காக நான் வருந்துகிறேன். என் வாழ்க்கையை உமக்காகத் திருப்பவும், உமக்காக உணர்ச்சியுடன் வாழவும், உம்மை கனப்படுத்தவும் நான் முயலும்போது, ​​தயவுக்கூர்ந்து அடியேனை ஆசீர்வதித்து அதிகாரத்தை தாரும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து