இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாங்கள் விடுவிக்கப்பட்டோம்! கிறிஸ்து இயேசு, தேவனுடைய கிருபையினாலும், அவர்மீது வைத்திருக்கும் விசுவாசத்தினாலும் நம்மை நியாயப்பிரமாணம், பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடுவித்தார் (ரோமர் 8:1-4). நியாயப்பிரமாண சட்டத்தை நாம் கடைப்பிடிப்பதன் மூலம் நியாயப்படுத்த முயற்சி செய்வதிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம். இயேசு நம்மீது பொழிந்த இரட்சிப்பிலே பங்குகொள்ள பரிசுத்த ஆவியானவரால் அதிகாரம் பெற்ற அவருடைய கிருபைக்காக நாம் இப்போது தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம் (தீத்து 3:3-7). அப்படியென்றால் இந்த சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவோம்? நாம் இப்போது பாவம் அல்லது நியாயப்பிரமாண சட்டத்தைக் கடைப்பிடிப்பதினால் "நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல்" இருக்க வேண்டும்! அதற்கு பதிலாக, நாம் பரிசுத்த ஆவியின் வல்லமையால் வாழ்வதினால் மறுரூபமடைந்து நாம் இயேசுவைப்போல மாறுகிறோம் (2 கொரிந்தியர் 3:18), எப்பொழுது என்றால் நாம் மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். " (ரோமர் 8:4).

என்னுடைய ஜெபம்

சுயாதீனமும், கிருபையுமுள்ள தேவனே , தயவுசெய்து பரிசுத்த ஆவியானவரால் எனக்கு அதிகாரத்தை தாரும் , அதனால் நீர் எனக்குக் கொடுத்த சுயாதீனத்தினால் நான் வாழும்போது நான் முழுமையாகப் புரிந்துகொண்டு பரிசுத்தத்தில் நிலைத்து வாழ முடியும். உமது கிருபையையும் ஆசீர்வாதங்களையும் ஆவியின் வல்லமையின் மூலம் என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள என்னைப் பயன்படுத்துங்கள். இவ்வளவு மாபெரிதான விலையை கொடுத்து வென்ற சுதந்திரத்தின் ஈவை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இயேசுவின்நல்ல நாமத்தினால் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து