இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

1 கொரிந்தியர் 6:19-20 ல், பவுல் நம்முடைய சரீரமானது நமக்குச் சொந்தமானவை அல்ல,ஏனெனில் கிறிஸ்து நம்மை தம் சொந்த இரத்தத்தினாலே கிரயத்துக்கு வாங்கினார், மேலும் நாம் நம் சரீரத்தால் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்று கூறினார். மீண்டும் ஒருமுறை, 7ஆம் அதிகாரத்தில், நாம் விவாகம் செய்துகொள்ளும்போது, ​​நம் சரீரம் நமக்குச் சொந்தமானது அல்ல என்பதை பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். மனைவியே அதற்கு அதிகாரி . நம் வாழ்க்கைத் துணையை ஆசீர்வதிக்கவும், தயவு செய்து, நிறைவைக் கொண்டுவரவும் நம் சரீரத்தைப் பயன்படுத்த வேண்டும். அவர்கள் நம்மை ஆசீர்வதிப்பதை உறுதி செய்வது நம் வேலை அல்ல, ஆனால் நாம் நம் கணவன் அல்லது மனைவியை ஆசீர்வதிப்பதை உறுதி செய்வதே நம் வேலை. இத்தகைய விட்டுக்கொடுக்கும் மற்றும் தியாக அன்பு ஆகியவை ஆரோக்கியமான திருமணத்திற்கு முக்கியமானவை. அத்தகைய அன்பான தியாகம் இல்லாமல், நாம் தேவனைப் பிரியப்படுத்தவோ அல்லது நம் மனைவியை ஆசீர்வதிக்கவோ முடியாது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் அன்புமுள்ள தேவனே , என் சரீரத்தை உமக்கு பரிசாகக் கருதாமல் என்னை நானே மலிவாகக் கருதியபோது என்னை மன்னியுங்கள். நான் திருமணமானவனாக இருந்தாலும் சரி, தனிமையில் இருந்தாலும் சரி, என் சரீரத்தைப் பரிசுத்தமான மற்றும் உமக்குப் பிரியமான வழிகளிலும், நான் திருமணமானால் என் திருமணத் துணையை ஆசீர்வதிக்கும் வழிகளிலும் பயன்படுத்த விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து