இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நமது குணாதிசியத்தின் மிகத் துல்லியமான அளவுகோல் எது? "சபையின் மத்தியில் " அல்லது மற்ற ஒரே சிந்தை கொண்டவர்களிடையே நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது மாத்திரம் அல்ல. நம்முடைய குணாதிசயத்தின் உண்மையான சோதனை என்னவென்றால் , நம்முடைய உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை , பரலோகத்திலுள்ள நம் பிதாவின் சித்தத்தோடு ஒன்றாய் இருக்கும்போது, காணாமற் போன , மறக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மற்றும் உடைந்தவர்களை மீட்பதற்கான அவருடைய கிரியைகளிலும் காணப்படுகிறது - அல்லது இந்த வசனத்தில்சொல்லப்பட்ட , "பரதேசி "மற்றும் " நம்மிடையே உள்ள திக்கற்ற பிள்ளைகள் மற்றும் "விதவைகள்" ஆகியவர்களை குறிக்கிறது . நாம் நமக்காக மட்டுமே வாழும்போதும், அன்பு, நீதி, கிருபை போன்றவற்றில் "இல்லாதவர்களை" மிகவும் பின்தங்கிய நிலையில் விட்டுவிடும்போது, நம்முடைய கலாச்சாரம் தன்னில் தானே சரிந்து விடுகிறது, ஏனென்றால் அது புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் தனிமையானவர்களுக்கு தேவையான தேவனுடைய இருதயம் இல்லாததால்; கூடுதலாக, கலாச்சாரம் உடைகிறது, ஏனெனில் "இல்லாதவர்கள்" இருப்பவர்கள் மீது பொறாமை மற்றும் வெறுப்பு அடையலாம் மற்றும் இருப்பவர்கள் இல்லாதவர்களை விட மேன்மையானவர்கள் என்று உணர வழி வகுக்கும்! நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் எப்படி நேசிக்கிறோம் என்பதுதான் நமது குணாதிசியத்தின் உண்மையான சோதனையாகும் .
என்னுடைய ஜெபம்
அன்பான தேவனே , சர்வவல்லமையுள்ள மற்றும் மெய்யான தேவனே, தயவுக்கூர்ந்து முதலாவது எங்களை மன்னித்து, பின்பு உம்முடைய நேர்மையான குணத்தாலும், கிருபையுள்ள இரக்கத்தாலும், மெய்யான அன்பினாலும் மற்றும் நீதியுடனும் வாழும் உம் பிள்ளைகளை எங்கள் நிலத்தை குணப்படுத்த எடுத்து பயன்படுத்தவும். தகப்பனே, நெருக்கடியான காலகட்டங்களில் யாரும் இல்லாமல் தேவைப்படும் ஒருவருக்கு நீர் அடியேனை ஆசீர்வாதமாகப் எடுத்து பயன்படுத்த வேண்டும் என்று நான் குறிப்பாக ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.