இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எங்களுடைய நீதியை அடிப்படையாக கொண்டு நாங்கள் நியாயப்பிரமாணச் சட்டம் மற்றும் அந்த சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம்! அது அராஜகம் மற்றும் சட்டம் இல்லை என்று அர்த்தம் கொள்ளுமா ? முற்றிலும் இல்லை! நியாயப்பிரமாணத்திலிருந்து நம்மை விடுவித்த கிருபை தேவனுடைய பரிசுத்த ஆவியையும் நமக்குள் வாசம் செய்யும்படி கொண்டுவந்தது. நம்மால் ஒருபோதும் செய்ய முடியாததைச் செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பெலப்படுத்துவார் (எபேசியர் 3:14-21). நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் ஜெபிக்க ஆவியானவர் நம்முடைய பெலவீனத்திலே நமக்கு உதவி செய்கிறார் (ரோமர் 8:26-27). பரிசுத்த ஆவியின் உதவியால், தேவனின் கிருபையினாலும் கிறிஸ்துவின் ஆவியினாலும் ஒன்றாக இணைக்கப்பட்ட பொறுப்புள்ள நண்பர்களின் கூட்டத்திற்கு நாம் கொண்டுவரப்படுகிறோம். நாம் ஆவியின் கனியாகிய - அன்பு, சந்தோஷம் , சமாதானம் , பொறுமை, இரக்கம், நற்குணம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம் போன்றவற்றை வளர்த்துக்கொள்ளும் போது, பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்க அனுமதிக்க ஒருவரையொருவர் ஊக்குவிக்கலாம் (கலாத்தியர் 3:22-23) - மேலும் நாம் அவரைப் பின்பற்றி வாழும்போது , நம் வாழ்கையில் இந்த குணாதிசயங்களை பிரதிபலிக்கும்போதும் மேலும் இயேசுவைப் போல் மறுருபமாகிறோம் (2 கொரிந்தியர் 3:17-18). பரிசுத்தம் மற்றும் அன்பு தேவைப்படும் உலகில் பரிசுத்தமான மற்றும் அன்பான வாழ்க்கையை வாழ இந்த "புதிய மார்க்கத்துக்காக " தேவனுக்கு நன்றி!
என்னுடைய ஜெபம்
பிதாவே , நியாயப்பிரமாண சட்டத்தின் தேவைகளிலிருந்து என்னை மீட்டு விடுவித்ததற்காகவும் , சட்டத்திற்குக் கீழ்ப்படிய முயற்சிப்பதை விட அதிகமாக இருக்க எனக்கு உதவுவதற்காக உமது ஆவியை என் இருதயத்தில் வைப்பதற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே அடியேன் உம்மை போற்றி துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.