இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ப்ளேஸ் பாஸ்கல் என்ற ஒரு விஞ்ஞானி கூறுகையில் , நம் ஒவ்வொருவருக்கும் உள்ள ஒரு வெற்றிடம், வெறுமையை தேவனின் பிரசன்னத்தைத் தவிர, வேறு எதைக் கொண்டும் நிரப்ப முடியாது என்று கூறினார் . இங்கே கவனியுங்கள், தேவன் நம்மைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கும்படி செய்தார் (அப்போஸ்தலர் 17:27-28). அவர் இல்லாமல் நாம் வெறுமையாக இருக்கிறோம் - . இந்த உண்மையின் பிரமிக்க வைக்கும் யதார்த்தத்தை கற்பனை செய்து பாருங்கள்: பிரபஞ்சத்தின் தேவன் நமக்கு அவரைத் தேவைப்படவும், அவர் நம்மில் இருப்பதை விரும்பவும் செய்தார். நாம் அவரைத் தேட வேண்டும் என்று அவர் ஏங்குவது ஆச்சரியமாக இருக்கிறதா? மனந்திரும்பி, வீட்டிற்குத் திரும்பும் அந்த இளைய குமாரனின் தந்தை வரவேற்றது போல, அவருடைய சமூகத்தில் நம்மை வரவேற்க அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் (லூக்கா 15:11-31). ஆகவே, இயேசு நம்மைக் கேட்கவும், தேடவும், தட்டவும் வலியுறுத்தினார், ஏனென்றால் தேவன் - பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் - நம்மை வரவேற்கவும் ஆசீர்வதிக்கவும் விரும்புகிறார்: நமக்கு மிகவும் தேவையானது ஒன்றே,அது அவரது மாறாத பிரசன்னம் மாத்திரமே !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என் சுயநல இருதயம் பல விஷயங்களைத் தேடும் அதே வேளையில், எனக்கு மிகவும் தேவைப்படுவது மிகவும் பரிசுத்தமான மற்றும் மாபெரிதான முறையில் உம்மை அறிந்துகொள்வதும், எங்கள் வாழ்க்கையில் நீர் இருக்க வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். இயேசுவின் நாமத்தில், நான் உமது பிரசன்னத்தைத் தேடுகிறேன் - என் பிதா, என் இரட்சகர் மற்றும் என்னுள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து