இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய வார்த்தையை நம்புகிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவருடைய வழி மெய்யானது மாத்திரமல்ல , அது ஜீவனைக் கொடுக்கிறதாயுமிருக்கிறது . ஆனால், அவருடைய புடமிட்ட வார்த்தையும் அவருடைய உத்தம வழியும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இன்னுமாய் அவருடைய சமூகம் நமக்கு கேடகமாக இருக்க வேண்டுமானால் நாம் அவரிடம் அடைக்கலம் புக வேண்டும். நமது விசுவாசம், நம்பிக்கை மற்றும் சார்ந்திருத்தல் ஆகிய இவைகள் அவரிடத்தில் சுயமாய் முன்வந்து வைக்கப்பட வேண்டும் மற்றும் உத்தம வார்த்தையால் வாழ்வதற்கு எல்லா ஜீவன்களும் உறுதியளிக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் முற்பிதாக்களின் தேவனுமாகிய எங்கள் தேவனே , என் ஆத்துமாவையும்,எதிர்காலத்தையும் உம்மிடம் விசுவாசிக்கிறேன் . நீரே என் பெலனும், கேடகமுமாயிருக்கிறீர். தயவு கூர்ந்து என்னையும், என் குடும்பத்தையும், உம்முடைய சபை மக்களையும் பொல்லாதவனிடமிருந்து மறைத்து,பாதுகாத்தருளும் . வருகின்ற நாட்களில் நாங்கள் உமக்குச் சேவை செய்து, உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் உமது விருப்பத்திற்கு மதிப்பளிக்க முயலும்போது, ​​தயவுசெய்து எங்களை சரீர பிரகாரமாக பாதுகாப்பாகவும், ஆவிக்குரிய பிரகாரமாக துடிப்பாகவும், ஒழுக்க ரீதியில் நேர்மையாகவும் வைத்திருங்கள். இயேசுவின் பெயரில். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து