இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துக் கொள்வார்கள், " இது எசேக்கியேலுடைய தீர்க்கதரிசனங்களில் பிரபலமான வாக்கியமாகும். கலகக்காரர்களும், பாவிகளும், துன்மார்க்கருமாய் இருந்த அவருடைய ஜனங்களுக்கு இங்கே இது ஒரு பயங்கரமான ஒன்றாகும். தேவன் பரிசுத்தராயிருக்கிறார். அவரை தங்கள் கர்த்தர் என்று அறிக்கையிடும் ஜனங்கள் அவருடைய மகிமையையும், மகத்துவத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்தத்தை பெரிதாக்கினர் . அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், தேவன் அவர்களைக் கொண்டும் கூட அவ்வாறு செய்து தேவன் தேவனென்று அறியப்படுவார். அநேகர், தேவனுடைய நாமத்தை பரிசுத்தக் குலைச்சலாக்கியும், அவர்களுக்கு உண்டாகிறதான சலிப்பிலும், எதிர்மறையான காரியங்களிலும் கவனக்குறைவாக உபயோகிக்கும் போதும், தேவனின் நாமம் பரிசுத்தமானது என்பது ஒரு நாள் தீவிரமான நினைப் பூட்டுதலாயிருக்கிறது. அவருடைய மகத்துவத்தையும், பரிசுத்தத்தையும் விளங்கச்செய்வார்.

என்னுடைய ஜெபம்

தேவனே, நான் பயபக்தியோடு இல்லாமலும் , உமக்குரிய தகுதியைக் கொடாமலும் இருந்தமைக்காக அடியேனை மன்னியும். உம்மையும், உம்முடைய பரிசுத்தத்தையும், அதிக ஆர்வத்தோடும் ஆழமான பிரமிப்பான உணர்வோடும் கனப்படுத்த உமது ஜனங்களின் மத்தியில் புதுப்பிக்கும் அலையை அனுப்பும்படி தயவாய் கேட்கிறேன். நீர் பரிசுத்தர், நீதியுள்ளவர், மாட்சிமையுள்ளவர், வல்லமையுள்ளவர், மகத்துவமுள்ளவர்.அதிக உண்மையுள்ள வாழ்க்கை மற்றும் வார்த்தையினால் உமக்குரிய என்னுடைய கனத்தை விளங்கச்செய்ய உதவியருளும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து