இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய பிரசன்னத்தைப் பற்றிய ஏசாயாவின் அனுபவம், இஸ்ரவேலுக்கான அவருடைய ஊழிய வாழ்க்கைக்குத் தேவையான பரிசுத்த சுத்திகரிப்பை அவருக்குக் கொண்டு வந்தது. அதுபோலவே, கர்த்தருடைய பந்தியின் போது நாம் உதடுகளில் அப்பத்தையும் திராட்சரசத்தையும் புசிக்கும் போதும், பருகும்போதும் , ​​இயேசுவின் பலியினாலும், பரிசுத்த ஆவியின் சுத்திகரிப்பு வல்லமையினாலும் நம்முடைய "பாவம் கழுவப்பட்டது " என்றும், நம்முடைய "பாவம் நிவர்த்தி செய்யப்பட்டது" என்றும் தேவன் நமக்கு நினைப்பூட்டுகிறார். நம்மால் செய்ய முடியாததை இயேசு நமக்காகச் செய்தார்: அவர் நம்முடைய பாவங்களுக்காக பரிபூரணமான பலியை அளித்தார், உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். (1 கொரிந்தியர் 6:9-11). நம்முடைய பரிசுத்தமும், நீதியும், பரிபூரணமும் பூமியில் நாம் செய்யும் முயற்சிகளினால் அல்ல, மாறாக பரலோகத்தின் மகிமையிலிருந்து வந்து, நாம் தேவனுடைய நீதியாக இருக்கும்படி தன் ஜீவனைக் கொடுத்த குமாரனால் பெறப்படுகிறது (2 கொரிந்தியர் 5:21; பிலிப்பியர் 2:5-11 )

Thoughts on Today's Verse...

Isaiah's experience of God's presence brought him sacred cleansing necessary for his life of service to Israel. Similarly, when we put the bread and wine to our lips during the Lord's Supper, God reminds us that our "guilt has been taken away" and our "sin has been atoned for" by the sacrifice of Jesus and the cleansing power of the Holy Spirit. Jesus did for us what we could never do: he provided the perfect sacrifice for our sins, and the Holy Spirit purified us and came to live in us (1 Corinthians 6:9-11). Our holiness, righteousness, and perfection are not won through our efforts on earth but by the Son who came from heaven's glory and gave his life so that we might be the righteousness of God (2 Corinthians 5:21; Philippians 2:5-11).

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற மற்றும் அன்பு நிறைந்த பிதாவே , என் பாவங்களுக்கான உமது பரிபூரண தியாகத்திற்காக உமக்கு நன்றி. உம்முடைய எண்ணி முடியாத ஈவைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த என்னைப் பயன்படுத்துங்கள். என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசுவின் நாமத்தில் உமக்கு எல்லா மகிமையும், கனமும், ஸ்தோத்திரமும், துதியும் உண்டாவதாக. ஆமென்.

My Prayer...

O precious and loving Father, thank you for your perfect sacrifice for my sins. Please use me to help others know of your incredible gift that allows them to stand before you holy and without any stain of sin. To you be all glory, honor, thanks, and praise in the name of Jesus, my Savior, and Lord. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ஏசாயா 6:6-7

கருத்து